27 நட்சத்திரங்களும் அவசியம் ஒரு முறையாவது செல்ல வேண்டிய ஆலயங்கள்

By Sakthi Raj May 08, 2026 04:27 AM GMT
Report

ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசியும் நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு அதிபதிகள் இருக்கிறார்கள். அப்படியாக, ஒவ்வொரு நட்சத்திர அதிபதிகளுக்கும் ஒரு பரிகார ஸ்தலங்கள் இருக்கிறது.

அந்த வகையில் நீங்கள் எந்த நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறார்களோ அந்த நட்சத்திரம் வருகின்ற நாளில் அதிகாலை இந்த ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்து மூலவருக்கு பாலாபிஷேகம் செய்ய பசும் பால் அல்லது பசு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் வாழ்க்கையில் சந்திக்கின்ற எல்லா பிரச்சனைகளும் விலகும்.

அப்படியாக, 27 நட்சத்திரக்காரர்களும் சென்று வழிபாடு செய்ய வேண்டிய முக்கியமான ஆலயங்கள் பற்றி பார்ப்போம்.

நீங்கள் பிறந்த தமிழ் மாதத்தில் வரக்கூடிய ஜென்ம நட்சத்திரம் அன்று இந்த கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது வாழ்க்கையில் நல்ல திருப்புனையும் பிறவி பலனை பெறலாம்.

1.அசுவினி - திருநள்ளாறு தர்ப்பாரன்யேசுவரர் சனிஸ்வரர் ஆலயம் சென்று வழிபாடு செய்தால் உடனடி மாற்றம் பெறலாம்.

2.பரணி - அரக்கோணம் அருகில் திருவாலங்காடு காளி ஆலயம் சென்று வழிபாடு செய்தால் தொட்ட காரியத்தில் வெற்றி நிச்சயம்.

3. கார்த்திகை- நாகப்பட்டினம் [நாகநாதர்] கோவிலில் ஆதிசேஷன் வழிபாடு செய்ய வெற்றிகள் குவியும்.

27 நட்சத்திரங்களும் அவசியம் ஒரு முறையாவது செல்ல வேண்டிய ஆலயங்கள் | Lucky Temple In Tamilnadu For 27 Nakshataras

4.ரோகிணி- திருநாகேஸ்வரம் [கும்பகோணம் அருகில்] நாக நாதர் ஆலயம் சென்று வழிபாடு செய்தால் தோஷங்கள் விலகும்.

5. மிருகசீரிடம்- கதிராமங்கலம் [கும்பகோணம் குத்தாலம் சாலை} வனதுர்க்கை அம்மனை வழிபாடு செய்ய தடைகள் யாவும் விலகும்.

6. திருவாதிரை- திருக்கொள்ளிக்காடு [திருவாரூர் அருகில்] சனீஸ்வரரை வழிபாடு செய்தால் கர்ம வினைகள் விலகும்.

7. புனர்பூசம்- ஆலங்குடி {கும்பகோணம் அருகில்] தட்சணாமூர்த்தி வழிபாடு செய்தால் கல்வியில் சிறந்து விளங்கலாம்.

8. பூசம்- குச்சனூர் [தேனி அருகில்] தட்சணாமூர்த்தியை வழிபாடு செய்தால் நினைத்ததை சாதிக்கலாம்.

9. ஆயில்யம்- திருப்பரகுன்றம் சனிபகவான் வழிபாடு செய்தால் தோஷத்தால் உண்டாகும் தடை விலகும்.

10. மகம்- சிதம்பரம் தில்லைக்காளியை வழிபாடு செய்தால் தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

11. பூரம்- திருமணஞ்சேரி [மயிலாடுதுறை] ராகு பகவானை வழிபாடு செய்தால் திருமண தோஷம் விலகும்.

12. உத்திரம்- மூலனூர்[ [தாராபுரம் அருகில்] உள்ள வஞ்சியம்மனை வழிபாடு செய்தால் குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

13. ஹஸ்தம்- திருவாரூர் ராஜ துர்க்கையை வழிபாடு செய்தால் ராகு தோஷம் நிவர்த்தி ஆகும்.

27 நட்சத்திரங்களும் அவசியம் ஒரு முறையாவது செல்ல வேண்டிய ஆலயங்கள் | Lucky Temple In Tamilnadu For 27 Nakshataras

14. சித்திரை- திருவாரூர் [வன்மீக நாதர் நீலோற்பாலம்பாள்] ராஜ துர்க்கை அம்மன் ஆலயத்தில் சனி பகவானை வழிபாடு செய்தால் கஷ்டங்கள் யாவும் விலகும்.

15. சுவாதி- திருவானைக்காவல் [திருச்சி அருகில்] ஜம்புகேசுவரர் கோயில் சென்று வழிபாடு செய்தால் மன அமைதி கிடைக்கும்.

16. விசாகம்- திருவேடகம் [சோழவந்தான் அருகில்] சென்று வாழிபாடு செய்தால் உறவுகளால் ஏற்படுகின்ற பிரச்சனை விலகும்.

17. அனுசம்- திருவிடைமருதூர் [கும்பகோணம்அருகில்] மூகாம்பிகையை வழிபாடு செய்தால் கோபம் குறைந்து எதிரிகள் விலகி செல்வார்கள்.

18.கேட்டை - பல்லடம் [காங்கேயம் அருகில்] அங்காள பரமேஸ்வரியை வழிபாடு செய்தால் துணையாக நின்று காப்பாள்.

19. மூலம்- மதுரையில் எந்த ஆலயத்திலும் உள்ள தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்ய மனத்தெளிவு கிடைக்கும்.

20. பூராடம்- திருநாவலூர் [பண்ருட்டி அருகில்] தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்தால் திருமண தோஷம் விலகும்.

21. உத்திராடம்- தருமபுரம் [திருநள்ளாறு] துர்க்கை தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்யலாம்.

22. திருவோணம்- தெத்துப்பட்டி [திண்டுக்கல் அருகில்] ராஜ காளியம்மனை வழிபாடு செய்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

23. அவிட்டம்- கொடுமுடி [கரூர் அருகில்] சென்று வழிபாடு செய்தால் சனி, ராகு தோஷம் விலகும்.

24. சதயம் - திருச்செங்கோடு [நாமக்கல் அருகில்] சனிபகவானால் ஏற்படுகின்ற பிரச்சனை விலகும்.

25. பூரட்டாதி – காஞ்சீபுரம் சித்ரகுப்தர் கோவில் வழிபாடு செய்தால் தோஷம் விலகும்.

26. உத்திரட்டாதி – ஓமாம்புலியூர் [சிதம்பர அருகில்] தட்சிணமூர்த்தியை வழிபாடு சியதால் சனி, ராகு தோஷம் விலகும்.

27. ரேவதி - ஒமாம்புலியூர் [சிதம்பரம் அருகில்] தட்சிணாமூர்த்தியை வழிபாடு சியதால் சனி, ராகு தோஷம் விலகும். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US