இன்றைய ராசி பலன் (08-05-2026)

Report

மேஷம்:

இன்று உங்களுக்கு மனதில் சில குழப்பங்களும் பதட்டமும் உண்டாகலாம். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சில இழுபறியை சந்திக்கலாம். அரசியல் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும்.

ரிஷபம்:

இன்று வாழ்க்கை துணையிடம் தேவை இல்லாத சண்டையிடாதீர்கள். பணம் சேமிப்பு பற்றி ஆலோசனை செய்வீர்கள். வேலையில் முழு உழைப்பை போட வேண்டிய நாள்.

மிதுனம்:

திருமண வரன் பார்ப்பதில் இருந்து வந்த சிக்கல் விலகும். தந்தை உடல் நிலையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்களின் ரகசியங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

கடகம்:

தேவை இல்லாமல் உணர்ச்சிவசப்படாதீர்கள். பிள்ளைகள் படிப்பில் முழுமையான அக்கறை செலுத்துவீர்கள். நீண்ட நாள் கைக்கு வராத பணம் வந்து சேரும். மதியம் மேல் நற்செய்தி வந்து சேரும்.

செல்வத்திற்கு அதிபதியான குபேரர் அருளை பெற்று கொடுக்கும் 3 அதிர்ஷ்ட ஆலயங்கள்

செல்வத்திற்கு அதிபதியான குபேரர் அருளை பெற்று கொடுக்கும் 3 அதிர்ஷ்ட ஆலயங்கள்

சிம்மம்:

அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கவனமாக பேசுங்கள். வாழ்க்கை துணையின் குடும்பத்தினருடன் இருந்து உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். அரசு தொடர்பான விஷயத்தில் உள்ள சிக்கல் விலகும்.

கன்னி:

போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் கவனச்சிதறல் இல்லாமல் படிக்க வேண்டும். சிலருக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும். பண பிரச்சனை தீரும்.

துலாம்:

வேலை பளு அதிகரிக்கும்.வீண் அலைச்சல் வரலாம். மனதில் உள்ள பயமும் பதட்டமும் விலகும். சிலருக்கு வெளிநாடு சென்று வேலை பார்க்கக்கூடிய யோகம் உண்டாகலாம்.

விருச்சிகம்:

தந்தை உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய விஷயங்களை தேடி தெரிந்து கொள்வீர்கள். வேலையில் உங்களுக்கு அங்கீகாரமும் பாராட்டுகளும் கிடைக்கும்.

இழந்ததை மீட்டு தரும் வல்லக்கோட்டை முருகப்பெருமான்

இழந்ததை மீட்டு தரும் வல்லக்கோட்டை முருகப்பெருமான்

தனுசு:

உடல் சோர்வு உண்டாகும். சிலருக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டாகலாம். தாய் வழி உறவுகளால் இருந்து வந்த மன கசப்புகள் விலகும். புதிய தொழில் தொடங்குவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள்.

மகரம்:

வம்பு வழக்குகளில் சிக்கி கொள்ளாதீர்கள். தாய் தந்தையின் சொல்ல கேட்டு நடந்து கொள்வீர்கள். சண்டையிட்டு சென்றவர்கள் மீண்டும் உங்களிடம் வந்து பேசுவார்கள்.

கும்பம்:

ஆடம்பர செலவுகள் தவிர்ப்பது நல்லது. சொந்தங்களின் பேச்சு கேட்டு நடப்பது நல்லது. வெளிநாடு சென்று வேலைபார்க்க திட்டமிடுவீர்கள். கோவில் வழிபாட்டில் ஆர்வம் உண்டாகும்.

மீனம்:

உடல் சோர்வால் சில வேலை தடை உண்டாகும். கணவன் மனைவி இடையே நல்ல புரிந்தால் உண்டாகும். எதிர்பாராத இடத்தில் இருந்து உங்களுக்கு திடீர் உதவிகள் தேடி வரும். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US