16 நாட்களுக்கு நடக்கும் புதன் பெயர்ச்சி- ராஜயோகத்தில் ஜொலிக்கப்போகும் ராசிகள்
பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் மாற்றங்களை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றது.
இதன்படி, சூரிய குடும்பத்தின் இளவரசனாக புதன் கிரகம் பார்க்கப்படுகிறது. புதனில் ஏதாவது மாற்றம் ஏற்படும் பொழுது 12 ராசிகளிலும் இதன் தாக்கம் இருக்கும்.
நன்மையை மாத்திரம் வாரி வழங்கக் கூடிய புதன் ஜூன் 11ஆம் தேதி இரவு 11.09 மணிக்கு ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியடைந்தார்.
இதனால் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு 16 நாட்கள் மங்களகரமானதாக அமையும் என சொல்லப்படுகிறது.
அந்த வகையில் புதன் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசியினர் யார் யார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. மேஷம்
புதன் சஞ்சாரத்தினால் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு நல்லதாகவே நடக்கும். தொழிலில் உயர்வு கிடைக்கும். சம்பளம் குறைவாக இருக்கின்றது என புலம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த நாட்களில் சம்பள உயர்வு கிடைக்கும். 16 நாட்களுக்குள் எங்கேயோ சென்று விடுவார்கள். தனியாக வியாபாரம் செய்கின்றவர் என்றால் வியாபாரம் அமோகமாக செல்லும்.
2. மிதுனம்
மிதுன ராசியினருக்கு புதன் சஞ்சாரத்தினால் வியாபாரம் அமோகமாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். அதிகமாக இலாபம் கிடைக்கும். இழந்த சொத்துக்கள் இந்த காலப்பகுதியில் உங்கள் கைக்கு வந்து சேரும்.
3. கன்னி
புதனின் சஞ்சாரத்தினால் கன்னி ராசிக்காரர்களுக்கு புகழ், பெருமை வந்து சேரும். ஜூன் 14ஆம் தேதிக்கு பிறகு வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை சந்திப்பீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியானதாகவும் அமைதியாகவும் இருக்கும். திருமணம் பற்றிய நல்ல முடிவு எடுப்பீர்கள்.
4. துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு புதன் சஞ்சாரம் அதிர்ஷ்டம் கிடைக்கும். தொழில் வாய்ப்பு இல்லாமல் இருக்கிறீர்களா? இந்த 16 நாட்களுக்குள் உங்களை தேடி நல்ல செய்தி வரும். வருமானம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.
5. தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சியால் புதிய ஒப்பந்தங்கள் மற்றும் முதலீடுகள் நடக்கும். வணிக வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதனை இந்த நாட்களில் நீங்கள் பார்ப்பீர்கள். ஆரோக்கியத்தில் அதிகமாக அக்கறை காட்டுவீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |