பெண்கள் வாழ்க்கையில் சாதிக்க சரண் அடையவேண்டிய தெய்வம் யார் தெரியுமா?
பெண்கள் அவர்கள் இயல்பாகவே மிகவும் மென்மையான குணம் படைத்தவர்கள்.ஆனால் இதிலும் சில வக்கிர எண்ணம் கொண்டவர்கள் இருப்பார்கள்.பொதுவாக ஒரு பெண்ணிற்கு ஒரு பெண் எதிரி என்றாலும் மறுபுறம் ஒரு பெண்ணிற்கு ஒரு பெண் தான் மிக பெரிய பலம் கொடுக்கக்கூடியவள்.இதை பலரும் உணர்ந்து இருக்கமாட்டார்கள்.சிலர் அவர்கள் வாழ்க்கை பாதையில் நிச்சயம் உணர்ந்து இருப்பார்கள்.
அப்படியாக ஒரு ஆண் காட்டிலும் பெண்கள் வாழ்க்கையில் சாதிக்க மிக பெரிய தடங்கல் தடைகள் இருக்கிறது.அப்படியாக வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்று துடிக்கும் பெண்களுக்கும் தங்கள் திருமண வாழ்வில் கணவன் வீட்டார் கொடுக்கும் பிரச்சனைகள் கடக்கவும் மனதில் தைரியம் இழக்காமல் தன்னம்பிக்கையோடு வாழவும் சரண் அடையவேண்டிய தெய்வம் மதுரை மீனாட்சி அம்மன்.
அம்மை போல் அழகிலும் பண்பிலும் வீரத்திலும் சிறந்து விளங்க அவளே மீண்டும் ஒரு ஜென்மம் எடுத்து வந்தாலே உண்டு.அத்தனை சக்தி வாய்ந்தவளை யார் ஒருவர் சரண் அடைந்து வழிபாடு செய்கிறார்களோ அம்பாள் அருளால் அவர்களுக்கு எதையும் தாங்கும் இதயமும்,போராடி வெல்லும் ஆற்றலும் பிறக்கும்.
அவள் மதுரை ஆளும் அரசி என்பதால் தான் மீனாட்சி அம்மன் கோயிலில் முதலில் அவளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு இருக்கிறது.அதாவது அம்பாளை வணங்கி ஆசி பெற்றாலே பிறகு நாம் ஆடல் அரசனை காணமுடியும்.ஆக அவள் கட்டளை இருந்தாலே எதுவும் இயங்கும்.
பெண்களுக்கே உதாரணமாக திகள்பவள் மதுரை மீனாட்சி அம்மன்.நீங்கள் வாழ்க்கையில் மிகவும் சோர்ந்து காணப்பட்டால் அவளை சென்று வழிபாடு செய்யுங்கள்.மனதார அவளை மனதில் நிறுத்தி வேண்டுதல் செய்யுங்கள்.அம்பாள் அவள் பிள்ளையை கைவிடமாட்டாள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |