நல்லவர்கள் ஒன்று சேர்வது கடினம் ஏன்? பகவான் கிருஷ்ணர் சொல்லும் பதில்

By Sakthi Raj Jul 27, 2024 06:54 AM GMT
Report

நல்லவர்கள் கெட்டவர்கள் என்பது அவர் அவர் பொருத்தது என்றாலும் பகவான் முன்னிலையில் அவருடைய விதி படி சில நியதிகள் இருக்கும்.

அதாவது எல்லா கெட்டவர்களும் ஒன்று சேருவது சுலபம் ஆனால் இரண்டு நல்லவர்கள் ஒன்று சேர்வது கடினம் என ஸ்ரீ கிருஷ்ணன் கூறிய நீதியை பற்றி பார்ப்போம்

மகாபாரத போர் பற்றி நாம் கேள்வி பட்டு இருப்போம்.அதில் துரியோதனன் போர் களத்தில் வீழ்த்தப் பட்டான், தரையில் வீழ்ந்துகிடக்கின்றான்.

நல்லவர்கள் ஒன்று சேர்வது கடினம் ஏன்? பகவான் கிருஷ்ணர் சொல்லும் பதில் | Mahabaratham Thuriyothanan Beeman Ramar Worship

அப்பொழுது விழுந்துபோனவனை பீமன் அவன் தலையை தன் காலால் மிதிக்க முயலுகிறான். பீமனுடைய செயல்களை பார்த்துக்கொண்டு இருந்த தர்மன் கூவுகிறான், பீமா அப்படி செய்யாதே அவன் ஒரு சாம்ராட் அரசன், இது சரியல்ல தர்மத்துக்கு உகந்த்து அல்ல என்று சொல்ல, துரியோதனன் அப்பவும் சளைக்க வில்லை,துரியோதனின் முகம் ஸ்ரீ கிருஷ்ணனைப் பார்க்கிறது.

கிருஷ்ணா! தர்மம் தர்மம் என்று பேசும் நீ, உன் கண் காட்டியதால் தானே இந்த பீமன் என்னை தொடையில் அடித்து மரணிக்க வைத்தான், இது தர்மமா?

சூரியனை மறையச் செய்து ஏமாற்றினாய்?

கர்ணனை சூசகமாக கொன்றாய்?

பீஷ்மரை சிகண்டியை முன் நிறுத்திக் கொன்றாய்?

ஓரு யானையை வைத்து துரோணரைக் கொன்றாய்?

நல்லவர்கள் ஒன்று சேர்வது கடினம் ஏன்? பகவான் கிருஷ்ணர் சொல்லும் பதில் | Mahabaratham Thuriyothanan Beeman Ramar Worship

இப்பொழுது அவன் என் தலையை மிதிப்பதை கூட நீ பார்த்துக் கொண்டு இருக்கிராய் என்று துரியோதனன் மிகுந்த மன வருத்தத்துடன் கிருஷ்ணரை பார்த்து கேட்க, மிகவும் புன் முறுவலுடன் கிருஷ்ணன் பதில் சொன்னான்.

துரியனே, தர்மத்தைப் பற்றிப் பேச உனக்கு தகுதி இல்லை, உலகின் மொத்த அதர்மமும் நீ செய்துவிட்டு, இப்ப தர்ம்ம் பற்றிச் சிந்திக்கிறாய், ஏன் என்றால் எல்லாம் இழந்த /துறந்த நிலையில் வரும் ஞானம் இது ராமனுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் என்பது எங்கள் அவதாரம் பூமியில் தோன்றிய காலத்தின் வேறுபாட்டில் தான்.

நவகிரகங்களை எவ்வாறு வழிபட வேண்டும்?

நவகிரகங்களை எவ்வாறு வழிபட வேண்டும்?


இராமனுக்கு எல்லா செயலின் பிறப்பும் சரி, அது செல்லும் வழியும் சரி, அது முடியும் முடிவும் சரி , தர்மம் சார்ந்தே இருக்க வேண்டும்.

ஆனால் நான் இருக்கும் காலம் கலியை தொடும் காலம், இதில் செயலின் பிறப்பு அதன் வழி எப்படி இருந்தாலும் அதர்மம் அழிக்க சில சாணக்கியம் செய்து, அதர்ம வழியையே உபயோகப்ப் படுத்தி பின் தர்ம்ம் ஜெயிக்க வேண்டும் என்பதே.

எல்லா கெட்டவர்களும் ஒன்று சேருவது சுலபம் ஆனால் இரண்டு நல்லவர்கள் ஒன்று சேர்வது கடினம். ஆகையால் தர்மம் நிலைக்க சில விஷயம் செய்தாக வேண்டிய கட்டாயம்.அதனால் நீ இதைப் பற்றிப் பேசாதே என்றார் ஸ்ரீகிருஷ்ணன்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US