மகாபாரதம்: பெண்களை அவமதித்தால் என்ன நடக்கும்? துச்சாதனனின் வாழ்க்கை உணர்த்தும் பாடம்
உலகம் போற்றும் காவியங்களில் மகாபாரதம் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. மகாபாரதத்தை நாம் படிக்கின்ற பொழுது உறவுகளுக்கிடையே நாம் எவ்வளவு தர்மமாக செயல்பட வேண்டும். தர்மத்தை மீறி செயல்படுகின்ற பொழுது மனிதர்கள் எந்த மாதிரியான துன்பங்களுக்கு ஆளாக நேரும் என்பதை பற்றி நிறைய விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள முடியும்.
அப்படியாக, மகாபாரதம் கதாபாத்திரங்கள் நமக்கு உணர்த்தக்கூடிய முக்கியமான வாழ்க்கை ரகசியங்களும் பாடங்களையும் பற்றி பார்ப்போம்.

1. துச்சாதனன் – பெண்களை ஒருபோதும் அவமதிக்காதே:
மகாபாரதத்தில் துரியோதனனுடைய தம்பி துச்சாதனன் ஆவான். பெண்களுக்கு எதிரான அவமதிப்பு மற்றும் அநீதியின் முக்கியமான எடுத்துக்காட்டாக இவர் மகாபாரதத்தில் கருதப்படுகிறார். சூதாட்டத்தில் தர்மர் அவருடைய சகோதரர்களையும் இறுதியில் திரௌபதியையும் பணயமாக வைத்து இழந்ததாக கதை உள்ளது.
அதன்படி துரியோதனனின் உத்தரவின் அடிப்படையில் துச்சாதனன் திரௌபதியை அவைக்குள் இழுத்து வருகிறான். அங்கு பல பெரியோர்களும், அரசர்களும் இருந்த நேரத்திலும் திரௌபதியின் சுயமரியாதை பற்றியோ அவளுடைய உரிமையை பற்றியோ எந்த ஒரு கவலையும் இல்லாமல் அவளை அனைவர் முன்பாக அவமானப்படுத்த முயன்றான்.
திரௌபதியின் ஆடையை பறிக்க முயன்ற சம்பவம் மகாபாரதத்தில் மிகவும் கொடுமையான நிகழ்வுகளில் ஒன்றாக உள்ளது. இதனை பார்த்துக் கொண்டிருந்த பீஷ்மன் கோபமடைந்து துச்சாதனனை கொள்வதாக சபதம் எடுத்துக் கொண்டார்.
அதேபோல், குருசேத்திரப் போரில் பீஷ்மன் அவருடைய சபதத்தை நிறைவேற்றி துச்சாதனனை கொன்றார்.
இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது:
ஒரு பெண்ணினுடைய மரியாதையும் சுயமரியாதையும் அவருடைய உரிமைகளையும் பாதுகாப்பது ஒவ்வொருவரினுடைய கடமை ஆகும். அதிகாரம் உள்ளது, பதவி இருக்கிறது, பலம் மிக்கவன் என்று ஒருவருக்கு மற்றொருவரை அவமதிக்கும் உரிமையை அவை எப்பொழுதும் வழங்குவதில்லை. ஆக, பெண்ணினுடைய கண்ணியத்தையும் சுயமரியாதையையும் மதிப்பதே உண்மையான வாழ்க்கை பாடமாகும்.
2. பீஷ்மர் – தவறான வாக்குறுதிகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் அடிமையாகாதே:
மகாபாரதத்தில் பீஷ்மர் மிகவும் முக்கியமான மற்றும் மதிக்கத்தக்க கதாபாத்திரங்களில் ஒருவராக இருக்கிறார். இவருடைய இயற்பெயர் தேவவிரதன். இவருடைய தந்தையான சாந்தனு மன்னர் சத்தியவதியை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஆனால், சத்தியவதியின் தந்தை அவருக்கு பிறக்கும் குழந்தைகள்தான் அரசு வாரிசுகளாக இருக்க வேண்டும் என்ற ஒரு நிபந்தனையை விதிக்கிறார்.
பிறகு தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக தேவவிரதன் அவருடைய அரச உரிமைகளை எல்லாம் துறக்கிறார். அது மட்டும் இன்றி தனக்கு ஒரு குடும்பம் என்று வந்து குழந்தைகள் பிறந்து ஒரு சந்ததியினர் என்ற ஒரு எதிர்காலம் வந்து விட்டால் அரசு வாரிசுரிமைப் பிரச்சனை ஏற்படக்கூடாது என்பதற்காக வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாக கடைப்பிடிப்பதாகவும் கடுமையான சபதம் எடுத்துக் கொண்டார்.
இந்த கடுமையான சபதத்தின் காரணமாகவே அவர் பீஷ்மர் என்று அழைக்கப்பட்டார். ஆனால், பின்னாளில் ஹஸ்தினாபுரத்தின் அரச குடும்பத்தில் ஏற்பட்ட அநீதிகளுக்கு எதிராக அவரால் முழுமையாக செயல்பட முடியாமல் போனது.
அரச அரியணைக்கு விசுவாசமாக இருப்பதற்கான அவருடைய உறுதிமொழி காரணமாக கௌரவர் தரப்பில் குருஷேத்திரப் போரில் பங்கேற்றார். இங்கு ஒரு முக்கியமான விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பீஷ்மர் தனது சபதத்தை காப்பாற்றுவதில் எந்த ஒரு தவறும் இல்லை.
ஆனால், அந்த சபதம் அவருடைய தர்ம கடமைகள் செய்வதில் சில சிக்கல்களை சந்திக்கும் பொழுது தான் பிரச்சனையாகிறது.
இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது:
இங்கு நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான வாழ்க்கை பாடம் எந்த நிலையிலும் சிந்திக்காமல் ஒருவருக்கு வாக்குறுதி கொடுப்பது கூடாது. கொடுத்த வாக்குறுதி காப்பாற்றுவது மிகவும் முக்கியம் என்றாலும் அதைவிட முக்கியமானது நீதியும் தர்மத்தை காக்க வேண்டிய கடமை ஆகும்.
ஆக, யோசிக்காமல் கொடுக்கக்கூடிய வாக்குறுதிகள் எதிர்காலங்களில் நம்முடைய சுதந்திரத்தையும் சரியான முடிவுகள் எடுக்கக்கூடிய திறனையும் பாதிக்கும் வகையில் அமையலாம் கவனமாக இருக்க வேண்டும்.
குறிப்பு:
இந்த எழுத்து வாசகர்களுக்கு சிந்தனை மற்றும் அறிவூட்டும் நோக்கத்திற்காக எழுதப்பட்டது. மகாபாரதம் தொடர்பான கதைகள் மற்றும் விளக்கங்கள் பல்வேறு மரபுகளில் வேறுபடலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |