வெள்ளைக்கிழமை மஹாலக்ஷ்மிக்கு உகந்த மலர் எது?
பவளமல்லி
அற்புத மணம் நிறைந்த பூவாக இந்த பூ திகழ்கிறது. இந்த பூவை எல்லா கடவுளுக்கும் நாம் சூட்டி வழிபடலாம். அதேபோல் இந்தப் பூ இருக்கும் இடத்தில் எதிர்மறை சக்திகள், தீய எண்ணங்கள் எதுவும் இருப்பதில்லை.
பாரிஜாதம்
இந்த மலர் பெருமாளுக்கு உகந்த மலராக கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இது தேவலோகத்தை சேர்ந்த மலர் என்றும் இதில் பெருமாள் வாசம் செய்கிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த மலரை பார்ப்பதும் இந்த செடியை வளர்ப்பதும் அதிர்ஷ்டத்தை வரவழைக்கக் கூடிய ஒன்றாகவே திகழ்கிறது.
மனோரஞ்சிதம்
இந்தச் செடியை வீட்டில் வளர்ப்பதன் மூலம் வீட்டில் இருக்கும் நபர்கள் புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாக செயலாற்றுவார்கள் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் செல்வ செழிப்பை இந்த செடி அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
செண்பகப் பூ செடி
இந்த செடி யார் ஒருவருக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதோ அவர்களிடம் தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த மலர்களை மகாலட்சுமி தாயாருக்கு வெள்ளிக்கிழமை தோறும் நாம் சூட்டினால் மகாலட்சுமி தாயார் மனம் மகிழ்ந்து நமக்கு செல்வ செழிப்பை ஏற்படுத்தித் தருவார் என்றும் கூறப்படுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |