மகாலக்ஷ்மிக்கு விளக்கேற்ற உகந்த நேரம்
நாம் தினமும் வீட்டில் விளக்கேற்றுவது உண்டு.அப்படியாக மகாலட்சுமிக்கு வீட்டில் எந்த நேரத்தில் விளக்கு ஏற்றுவது உகந்தது என்று பார்க்கலாம். வீட்டில் விளக்கேற்றுவது என்பது மிக முக்கியமான ஒன்று.
குடும்பம் என்பது ஆயிரம் இருக்கும்.அதில் இன்பம் துன்பம் என்று மாறி மாறி வரும். அவற்றில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள இறைவழிபாடு மட்டுமே கைகொடுக்கும்.
வீட்டில் ஒருவர் தொடர்ந்து விளக்குஏற்றுவதால் வீட்டில் தீய சக்திகள் விலகி நேர்மறை எண்ணங்கள் நிலைத்து இருக்கும்.
அதனால் தான் வீட்டில் தீப ஒளி ஏற்ற வேண்டும் என்கின்றனர்.அந்த தீப ஒளிக்கு மிகுந்த சக்திகள் உண்டு.
மகாலக்ஷ்மி வாசம் செய்யும் இந்த தீபம் ஒருவர் வீட்டில் மாலை நேரத்தில் ஏற்றுவது மிகுந்த நற்பலன்களை தருகிறது.
மேலும் மாலை நேரத்தில் நாம் தீபம் ஏற்றும் பொழுது வீட்டில் சாப்பிடுதல் தூங்குதல் கெட்ட செயல்கள் செய்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
ஆக முடிந்த வரை மாலை நேரத்தில் வீட்டில் விளக்கு ஏற்ற குடும்ப ஒற்றுமை பெருகும்.சந்தோசம் நிலவும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |