நிம்மதியான வாழ்க்கை வாழ சொல்லவேண்டிய மந்திரம்
மனிதன் வாழ்வில் என்னதான் பணம் சம்பாதித்தாலும் மனதில் நிம்மதி என்பது நிச்சயம் வேண்டும்.அப்பொழுது தான் அவன் மகிழ்ச்சியான வாழ்வை வாழ முடியும்.மேலும்,உங்களை சுற்றி எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்றாலும்,மனதில் பொறாமை போட்டிகள் இருந்தாலும் கட்டாயம் நிம்மதியான வாழ்வு வாழ முடியாது.
இன்னும் சொல்ல போனால் மனிதனின் மொத்த சந்தோஷத்தையும் கெடுப்பதும் அவனுடைய இந்த தீய எண்ணங்கள் தான்.ஒரு மனிதனுக்கு தீய எண்ணங்கள் அவனுடைய சூழ்நிலையால் ஏற்படுவதே ஆகும்.ஆக,அவனுடைய நிம்மதி இல்லாத சூழ்நிலைக்கு அவனுடைய தேவை இல்லாத சிந்தனைகள் என்று தெரிந்தாலும் அவனால் அதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிவதில்லை.
அந்த வேளையில் எவர் ஒருவர் அவருடைய தவறை உணர்ந்து உண்மையில் தீய எண்ணங்களில் இருந்து விடுபட வேண்டும் என்று நினைக்கிறார்களோ,அவர்கள் செய்யவேண்டிய ஒரே விஷயம் இறைவழிபாடு தான்.மனதார நம்மை இறைவனிடம் சரண் அடைய நம்முள் இருக்கும் அழுக்குகள் எல்லாம் படிப்படியாக குறையும்.
அதோடு இறைவனுடைய மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்தால் இன்னும் கூடுதல் பலன்கள் பெற முடியும்.அதிலும் “நற்பவி நற்பவி நற்பவி” இந்த வார்த்தையை சொல்லும்போது நம் மனதிற்குள் இனம் புரியாத ஒரு சந்தோஷம் ஏற்படும்.இதை சொல்லும் பொழுது நம் மனதில் உற்சாகம் பெருகும்.
நீங்கள் எவ்வளவு பெரிய இன்னல்களில் இருந்தாலும் சரி இந்த வார்த்தை சொல்ல நம்முடைய மனநிலை மாறும்.எவ்வளவு சக்தி வாய்ந்த மந்திரத்தை “நற்பவி நற்பவி நற்பவி ஓம், ஓம் சக்தி ஓம், சக்தி சிவ சக்தி ஓம்” என்று சொல்ல நம்முடைய வாழ்வில் இனம் புரியாத நேர்மறை எண்ணங்களும் சிந்தனைகளும் பெருகும்.
இந்த மந்திரத்தை ஒருகுறிப்பிட நேரத்தில் தான் சொல்லவேண்டும் என்று இல்லை.உங்கள் மனம் எப்பொழுது எல்லாம் கவலை கொள்கிறதோ அப்பொழுது எல்லாம் மனதில் மந்திரம் சொல்லிக்கொண்டால் உங்கள் வாழ்வு வளம் பெருகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |