இன்றைய ராசி பலன்(06-03-2025)
மேஷம் :
இன்று பிறருக்காக தேவை இல்லாத செலவுகள் செய்வதை தவிர்க்கவும்.கணவன் மனைவி இடையே நல்ல அன்யோன்யம் உருவாகும்.பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.
ரிஷபம்:
இன்று வங்கி முதலீட்டில் கவனமாக இருக்க வேண்டும்.அடுத்தவர்களை நம்பி எந்த ஒரு காரியமும் செய்யவேண்டாம்.தொழிலில் சிறு சிறு பிரச்சனை உருவாகும்.
மிதுனம்:
குடும்பத்தில் சிலர் உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள்.பெற்றோர்கள் நலனில் அக்கறை செலுத்துவது நல்லது.அலுவலகத்தில் வீண் வாக்குவாதம் தவிர்க்க வேண்டும்.
கடகம்:
காதல் செய்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.வாழ்க்கையில் எந்த இரு முக்கிய முடிவுகளும் இன்று எடுக்க வேண்டாம்.சிலருக்கு மதியம் நல்ல செய்தி வந்து சேரும்.
சிம்மம்:
இன்று இவர்களுக்கு தொழில் ரீதியாக நிறைய சிக்கலை சந்திக்க நேரிடும்.வண்டி வாகனத்தில் கவனமாக செல்ல வேண்டும்.ஒரு சிலருக்கு உடல் ஆரோக்கியத்தில் சில குறைபாடுகள் ஏற்படலாம்.
கன்னி:
புதிய நண்பர்கள் அறிமுகம் ஆதாயம் வழங்கும்.குடும்ப விஷயங்களை மூன்றாம் நபரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.ஒரு சிலருக்கு அண்ணன் வழி உறவால் சங்கடம் உருவாகும்.
துலாம்:
இன்று வீண் அலைச்சல் உருவாகும்.சிலர் உங்களுக்கு எதிராக செயல் படலாம்.கவனமாக இருக்க வேண்டும்.இறைவழிபாடு நன்மை அளிக்கும்.மனம் தெளிவு பெரும்.
விருச்சிகம்:
குழந்தை சம்பந்தமான விஷயங்களில் கவனம் அவசியம்.குல தெய்வ வழிபாடு செய்வது வரும் ஆபத்துகளை இருந்து காப்பாற்றும்.மாமனார் வழி உறவால் சிக்கல் உண்டாகும்.
தனுசு:
இன்று நீங்கள் எதையும் ஆழமாக யோசிக்க வேண்டாம்.உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.உண்மையான நண்பர்கள் யார் என்று கண்டுகொள்வீர்கள்.
மகரம்:
உங்கள் பணிகளைக் கையாளும் பொழுது கூடுதல் கவனம் தேவை. முறையாக அட்டவணை அமைத்து பணியாற்ற வேண்டியது அவசியம்.இன்றைய நாள் ஒரு நன்மை தீமை கலந்த நாளாகும்.
கும்பம்:
பணியைப் பொறுத்தவரை இன்று நல்ல நிலை காணப்படும். உங்கள் மேலதிகாரிகளிடமிருந்து அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிய வேலைவாய்ப்புக்கும் வாய்ப்பு உள்ளது.
மீனம்:
ஒரு சிலருக்கு வங்கியில் சில பிரச்சனை சந்திக்கலாம்.பிள்ளைகளால் சிறு தொந்தரவு உண்டாகும்.மனைவி வழி உறவால் ஆதாயம் கிடைக்கும்.பெருமாள் வழிபாடு செய்ய சிறந்த நாளாக அமையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |