இன்றைய ராசி பலன்(11.01.2025)

Report

மேஷம்:

இன்று நீங்கள் வேலையில் வெற்றி காணும் நாள்.தொலைதூர பயணம் செல்ல திட்டமிடுவீர்கள்.நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.எதிர்கால சிந்தனை உங்களுக்கு அச்சம் கொடுத்தாலும் சமாளிப்பீர்கள்.

ரிஷபம்:

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் பேசும் பொழுது சற்று நிதானமாக பேசுவது அவசியம்.கோபம் சற்று அதிகம் வரும் நாள்.ஆதலால் பேச்சு வார்த்தையை தவிர்ப்பது பெரிய பிரச்னைகளில் இருந்து காப்பாற்றும்.

மிதுனம்:

முடிவிற்கு வராத பிரச்சனைகளை பேசி தீர்ப்பீர்கள்.கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.பிறருக்கு கடன் கொடுப்பதையும் வாங்குவதையும் தவிர்க்க வேண்டாம்.புதிய வாகனம் மாற்றும் யோகம் உருவாகும்.

கடகம்:

நீண்ட நாட்களாக நீடித்து வந்த ஒரு பிரச்னை முடிவிற்கு வரும். வழக்கமான செயல்கள் லாபமாகும்.வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். புதிய பொருட்கள் சேரும். நண்பர்களால் ஆதாயம் காண்பீர்கள்.

சிம்மம்:

உங்கள் முயற்சி பலமடங்கு அதிகம் ஆகும்.பழைய பிரச்சனைகளை மிக துணிச்சலாக ஒரு வேலை செய்து முடிப்பீர்கள்.கடந்த கால அனுபவம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.வீண் கவலைகள் வேண்டாம்.

கன்னி:

இன்று உங்களுக்கு சாதகமான நாள்.பெரிய மனிதர்கள் ஆதரவால் நீங்கள் நினைத்தது நிறைவேறும்.உங்கள் வருமானம் உங்களுக்கு கைகொடுக்கும்.நட்பு வட்டாரம் விரிவடையும்.சந்தோஷமான நாள்.

சிவபெருமான் உண்மையில் கல் நெஞ்சம் கொண்டவரா?

சிவபெருமான் உண்மையில் கல் நெஞ்சம் கொண்டவரா?

துலாம்:

மனதில் இனம் புரியாத குழப்பம் வருவாகும்.கவலைகள் அதிகரிக்கும்.விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும்.வரவு செலவில் கவனமாக இருக்கவேண்டும்.

விருச்சிகம்:

எதிர்பார்த்த பணம்வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் நடந்தேறும்.உங்கள் செயலில் வேகம் இருக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும்.

தனுசு:

பூர்விக சொத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.உங்கள் எதிரிகள் விலகி செல்வார்கள்.உங்கள் மனதில் ஏற்பட்ட காயங்கள் மறையும்.நிதானமாக இருக்க வேண்டிய நாள்.

மகரம்:

குடும்ப நலனில் அக்கறை செலுத்துவீர். பிள்ளைகள் உங்கள் வேலைகளுக்கு உதவியாக இருப்பர்.வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். சிலர் நவீன பொருட்கள் வாங்குவீர்கள்.

கும்பம்:

சிறு வியாபாரிகள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். பணியில் இருந்த நெருக்கடி நீங்கும். உழைப்பிற்கேற்ற ஆதாயம் ஏற்படும்.வாழ்க்கைத் துணையின் ஆலோசனை உங்கள் முயற்சியை லாபமாக்கும்.

மீனம்:

உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பால் உங்களுக்கு ஆதாயம் உண்டாகும்.குடும்ப பிரச்சனை ஒரு நல்ல முடிவிற்கு வரும்.உற்சாகமாக செய்லபட்டு நினைத்ததை சாதிப்பீர்கள்.பொருளாதார முன்னேற்றம் இருக்கும்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US