இன்றைய ராசி பலன்(19.12.2024)
மேஷம்:
விலகி போன உறவுகள் உங்களை தேடி வருவார்கள்.குடும்பத்தில் உண்டான நெருக்கடிகள் குறையும்.வெளி வட்டாரத்தில் உங்கள் மதிப்பு உயரும்.புதிய பொருளை வாங்குவீர்கள்.
ரிஷபம்:
உங்களுடைய நீண்ட நாள் பணத்தேவை பூர்த்தியாகும்.நண்பர்களுடன் சுற்றுலா பயணம் செல்ல நேரிடலாம்.தாய் தந்தை உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.நன்மையான நாள்.
மிதுனம்:
உங்கள் சாதுரிய புத்தியால் அலுவலகத்தில் நல்ல பெயர் வாங்குவீர்கள்.உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.நடந்ததை நினைத்து வருத்தம் அடைவீர்கள்.
கடகம்:
நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி உண்டாகும். இழுபறியாக இருந்த பிரச்னையில் தீர்வு காண்பீர்.இனம் புரியாத குழப்பத்திற்கு ஆளாவீர்.வியாபாரம் செய்யும் இடத்தில் நிதானம் தேவை.
சிம்மம்:
வியாபாரத்திற்காக அவர்கள் அலைச்சல் அதிகரிக்கும்.பெரியோர் ஆலோசனை உங்களுக்கு திருப்தியாக அமையும்.தொலைந்து போன பொருட்கள் உங்கள் கைவசம் வரும்.
கன்னி:
உங்கள் நம்பிக்கை வெற்றியாகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவீர்.வரவேண்டிய பணம் வசூலாகும்.
துலாம்:
ஒருமுறைக்கு பலமுறை ஒரு விஷயத்தை சிந்தித்து செயல்படுவது நன்மையை தரும்.இறைநாட்டம் அதிகரிக்கும்.குடும்பத்துடன் கோயில்களுக்கு சென்று வருவீர்கள்.நன்மையான நாள்.
விருச்சிகம்:
சாமர்த்தியமாக செயல்படுவீர். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். வரவேண்டிய பணம் வரும்.பிறரை நம்பி நீங்கள் ஈடுபடும் வேலையில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
தனுசு:
எதிர்காலத்தை பற்றிய சிந்தனை மேலோங்கும்.வெளியூர் பயணத்தில் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும்.தேவையற்ற பிரச்சினைகள் தேடிவரும். பொறுமை காப்பது நன்மையாகும்.
மகரம்:
வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மைதரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். நண்பர்களால் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். நீங்கள் நினைப்பது நடந்தேறும். மனதில் தன்னம்பிக்கை ஏற்படும்.
கும்பம்:
நீண்டநாட்களாக இழுபறியாக இருந்த வேலைகளை செய்து முடிப்பீர்கள்.உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வர். திட்டமிட்டிருந்த வேலைகள் நடந்தேறும். பிரபலங்களின் ஆதரவும், எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும்.
மீனம்:
குலதெய்வம் வழிபாடு உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை வழங்கும்.கோயில் வழிபாடுகளில் அதிகம் நாட்டம் செல்லும்.புதிய அறிமுகங்கள் கிடைக்கும்.ஆதாயமான நாள்.பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |