இன்றைய ராசி பலன்(24.12.2024)
மேஷம்:
புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு சக பணியாளர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள்.வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாக முடியும்.இனிமையான நாள்.
ரிஷபம்:
குடும்பத்தில் உண்டான நெருக்கடிகள் விலகும்.எதையும் தீர ஆலோசித்து செயல்படுவது சிறந்த பலன்களை கொடுக்கும்.வியாபாரத்தில் சிறு சிறு குழப்பங்கள் உண்டாகும்.எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்.
மிதுனம்:
எதிர்பாராத நபரை சந்திப்பதால் மன கசப்புகள் ஏற்படும்.உறவினர்கள் இடையே கடும் வாக்குவாதத்தை தவிர்க்கவும்.அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக சிலர் சில செயல்களில் ஈடுபடுவார்கள்.
கடகம்:
பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வெளியூர் பயணம் லாபம் தரும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி புரிவர்.தொழிலில் பணியாளர் உதவியுடன் லாபம் காண்பீர்.சந்தோஷமான நாள்.
சிம்மம்:
பிறரிடம் தேவை இல்லாத விஷயங்களை பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும்.உங்களுக்கான வருமானம் அதிகரிக்கும்.உங்கள் திறமையால் நினைத்ததை சாதிப்பீர்கள்.இறைவழிபாட்டில் ஆர்வம் செல்லும்.
கன்னி:
உங்கள் திருமண வாழ்க்கையை பற்றி பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.மனக்கவலைகள் விலகும்.உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை எளிதாக கண்டுகொள்வீர்கள்.
துலாம்:
காலையில் இருந்து சிறு பதட்டத்துடன் காணப்படுவீர்கள்.மனதை நிதானமாக வைப்பது அவசியம்.உங்கள் தேவைகள் பூர்த்தியாகும்.சமுதாயத்தில் உங்கள் மதிப்பு உயரும்.அதிகம் யோசிப்பதை தவிர்ப்பது நல்லது.
விருச்சிகம்:
எதிர்பார்த்த தகவல் வரும். உங்கள் முயற்சி அனுகூலமாகும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடிப்பீர்.
தனுசு:
பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.வீட்டிற்கு உறவினர்கள் வருகை தருவார்கள்.பிறருக்கு கடன் கொடுத்த பணத்தை திரும்ப பெறுவீர்கள்.யோகமான நாள்.
மகரம்:
எதிலும் பலமுறை யோசித்து செயல்படுவீர். மனக்குழப்பம் நீங்கும். பெரியோரின் துணையால் உங்கள் வேலை நடக்கும்.வியாபாரத்தில் இருந்த தடை விலகும். நிதிநிலை சீராகும்.
கும்பம்:
வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். எதிர்பார்ப்பு இன்று ஏமாற்றத்தில் முடியும். உடனிருப்போரை அனுசரித்துச் செல்வது நல்லது.புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது.
மீனம்:
மனதில் ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும்.பிறருக்கு உதவி செய்வதால் உங்கள் மனம் அமைதி அடையும்.பிறரை பற்றி தெரிந்து கொள்வீர்கள்.வெளியூர் பயணம் சாதகமாக அமையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |