ஜோதிடத்தின் படி எந்த ரொசி பெண்களை மணந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக திருமணம் என்று வந்தாலே தங்களது வாழ்க்கைத் துணை எப்படி இருக்க வேண்டும் என பலரும் கற்பனை செய்து கொண்டிருப்பர்.
ஆனால் அனைவருக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ சரியான வாழ்க்கைத் துணை கிடைப்பதில்லை.
ஆனால் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து ராசி பெண்களை திருமணம் செய்தால் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்குமாம்.
இந்த பெண்கள் தங்களது கணவர்களை அன்பாகவும் நடத்துவார்களாம். அந்த வகையில் எந்தெந்த ராசியினர் என்பதை தெரிந்து கொள்வோம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் நம்பிக்கை, விசுவாசம் மற்றும் உறுதிப்பாட்டிற்கு பெயர் பெற்றவர்கள். இதன் காரணமாக இவர்கள் விசுவாசமான வாழ்க்கைத் துணைவர்களாக மாறுகின்றனர். இவர்கள் தங்கள் குடும்ப நலனை முதன்மையாக கருதுகின்றனர்.
திருமண வாழ்க்கையை அதிகம் மதிக்கின்றனர். தங்கள் கணவரையும், குடும்பத்தையும் நன்றாக புரிந்து கொள்கின்றனர். தங்கள் கணவருக்கு ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கின்றனர்.
இவர்கள் தங்கள் கணவரை மிகவும் நேசிக்கின்றனர். எனவே ரிஷப ராசி பெண்களை திருமணம் செய்பவர்களின் வாழ்க்கை மிகச் சிறப்பாக இருக்கும்.
கடகம்
கடக ராசியைச் சேர்ந்த பெண்கள் இயற்கையிலேயே மிகவும் அன்பானவர்கள். அவர்கள் குடும்பம் பற்றிய அக்கறை கொண்டிருப்பவர்கள். குடும்பத்தின் மீது அளவு கடந்த அன்பு வைத்திருப்பார்கள்.
மற்ற எதைக்காட்டிலும் தங்களது குடும்பங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். கடக ராசியைச் சேர்ந்த பெண்கள் அனைவருடைய அன்பையும் பெறுபவர்கள். அனைவருடைய இதயத்தையும் எளிதில் வெல்லும் குணம் படைத்தவர்கள்.
வீட்டில் எந்த சண்டையும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருப்பதை விரும்புகின்றனர். எனவே கடக ராசி பெண்களை திருமணம் செய்து கொண்டால் வீட்டில் எந்த பிரச்சனையும் இல்லாமல் அமைதியான சூழல் நிலவும்.
கன்னி
கன்னி ராசியை சேர்ந்த பெண்கள் நிர்வாக திறமை கொண்டவர்கள். இவர்கள் தங்கள் குடும்பத்தை கட்டுக்கோப்பாக நிர்வகிக்கும் தன்மை கொண்டவர்கள். அவர்கள் செய்யும் அனைத்து வேலைகளிலும் கவனமாக இருப்பார்கள்.
வீட்டை சுத்தமாகவும், ஒழுங்காகவும் வைத்திருப்பதிலும், வீட்டில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளை திறம்பட தீர்ப்பதிலும் அவர்களின் பங்கு அளவிட முடியாதது. அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வுகளால் குடும்ப உறவுகளை எந்த பிரச்சனையும் இல்லாமல் சமாளிக்க முடியும்.
கன்னி ராசியைச் சேர்ந்த பெண்கள் எந்த வீட்டிற்குள் நுழைந்தாலும், அந்த வீடு மகிழ்ச்சியானதாக இருக்கும்
விருச்சிகம்
விருச்சிக ராசியைச் சேர்ந்த பெண்கள் குடும்பத்தையும், குடும்ப உறவுகளையும் மிகவும் மதிக்கும் தன்மை கொண்டவர்கள். மிகவும் விசுவாசமானவர்களாகவும் அதேசமயம் ஆளுமை திறன் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர்.
இந்த ராசிக்காரர்கள் தங்கள் குடும்பத்தை மிகவும் நேசிக்கின்றனர். தாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், சிரமங்களை எதிர்கொண்டாலும் தங்கள் குடும்பத்தை அவர்கள் ஒருபோதும் விட்டுக் கொடுப்பதில்லை.
குறிப்பாக பெண்கள் தங்கள் கணவர்களின் குடும்பத்திற்கு ஆதரவாக இருக்கின்றனர். இந்த ராசியை சேர்ந்த பெண்களால் கணவரின் குடும்பத்தில் மகிழ்ச்சி தழைத்தோங்கும்.
மீனம்
மீன ராசியில் பிறந்தவர்கள் இயற்கையிலேயே இரக்க குணம் கொண்டவர்கள் அவர்களின் மென்மையான குணம் பொறுமை அர்ப்பணிப்பு அவர்களை சிறந்த வாழ்க்கை துணையாக மாற்றுகிறது.
குடும்பத்தில் அமைதியான சூழலை ஏற்படுத்துவதில் மீன ராசி பெண்களுக்கு முக்கிய பங்கு உண்டு மீன ராசியில் பிறந்த பெண்களை திருமணம் செய்து கொள்வது என்பது வாழ்க்கையை மகிழ்ச்சியான ஒன்றாக மாற்றும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







