செவ்வாய் பெயர்ச்சி- காதலில் அமோக அதிர்ஷ்டம் பெறும் ராசியினர்

By DHUSHI Jul 21, 2024 10:36 AM GMT
Report

கடந்த ஜூலை 12 அன்று முதல் செவ்வாய், சுக்கிரன் கிரகத்திற்குச் சொந்தமான ரிஷப ராசியினுள் நுழைந்துள்ளது.

அதாவது செவ்வாய் கிரகம் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளை ஆட்சி செய்கிறார்.

செவ்வாய் தனது சொந்த ராசியில் இருக்கும் போது ருச்சக யோகம் உருவாகும். இந்த யோகம் உலகில் மங்களகரமான யோகங்களில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது.

மேற்குறிப்பிட்ட செவ்வாய் பெயர்ச்சி எதிர்வரும் 26 ஆகஸ்ட் வரை இருக்கும். இதனால் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களின் ஆன்ம காதல் வாழ்க்கையை ஆழமாக பாதிக்கிறது.

செவ்வாய் பெயர்ச்சி- காதலில் அமோக அதிர்ஷ்டம் பெறும் ராசியினர் | Mars Transit In Taurus Zodiac Signs Love Life

அந்த வகையில் இந்த நாட்களில் காதல் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்று தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

1. மேஷ ராசியினர்

மேஷ ராசியில் பிறந்தவர்களின் முதல், எட்டாம் வீட்டிற்கு அதிபதியான செவ்வாய் இருக்கிறார். இதனால் உங்களுக்கும் மனைவிக்கும் இடையே நல்ல காதல் இருக்கும்.

இருவரும் உறவுக்கு முக்கியத்துவம் கொடுத்து காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வார்கள். காதல் உறவின் பொற்காலம் இதுவாக பார்க்கப்படுகின்றது.

செவ்வாய் பெயர்ச்சி- காதலில் அமோக அதிர்ஷ்டம் பெறும் ராசியினர் | Mars Transit In Taurus Zodiac Signs Love Life

2. ரிஷப ராசியினர்

ரிஷப ராசிக்காரர்களுக்கு ஏழாவது, பன்னிரண்டாம் வீட்டில் அதிபதியாக செவ்வாய் இருக்கிறார். இவரின் சஞ்சாரத்தினால் உங்கள் துணையுடன் நல்ல உறவில் இருப்பீர்கள்.

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் தன்னுடைய வாழ்க்கைத்துணையின் மீது முழுமையான அன்பை அனுபவிப்பார்கள். இருவருக்கும் இடையே இருக்கும் உறவு வலுவதாக இருக்கும். கூடிய விரைவில் நல்ல செய்தி தேடிவரும்.

செவ்வாய் பெயர்ச்சி- காதலில் அமோக அதிர்ஷ்டம் பெறும் ராசியினர் | Mars Transit In Taurus Zodiac Signs Love Life

3. கடக ராசியினர்

கடக ராசியில் ஐந்து, பத்தாம் வீட்டிற்கு அதிபதி செவ்வாய் இருக்கிறார். இதனால் இந்த காலத்தில திருமணமானவர்களுக்கு சாதகமாக இருக்கும்.

அத்துடன் காதல் உறவில் இருக்கும் காதலர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். மகிழ்ச்சியாக நேரத்தை செலவு செய்யலாம். துணையின் செயல்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். 

செவ்வாய் பெயர்ச்சி- காதலில் அமோக அதிர்ஷ்டம் பெறும் ராசியினர் | Mars Transit In Taurus Zodiac Signs Love Life

4. மீன ராசியினர்

விருச்சிக ராசியில் பிறந்தவர்களின் இரண்டாவது மற்றும் ஒன்பதாம் வீட்டில் அதிபதியாக செவ்வாய் இருக்கிறார். இவர்கள் உறவை வலுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் செய்வார்கள்.

இவர்களின் குணத்தை புரிந்து கொண்டு துணை உங்களை தேடி வரும். வாழ்க்கைத்துணைக்கும் உங்களுக்கு இடையே மகிழ்ச்சியும், நெருக்கமும் அதிகரிக்கும்.

செவ்வாய் பெயர்ச்சி- காதலில் அமோக அதிர்ஷ்டம் பெறும் ராசியினர் | Mars Transit In Taurus Zodiac Signs Love Life

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 
+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US