இன்றைய ராசி பலன்(27.02.2025)

Report

மேஷம்:

இன்று உங்கள் வீட்டில் சுப கரிய விஷயங்களை பற்றி பேசுவீர்கள்.ஒரு சிலருக்கு பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.மனதில் தெளிவும் உற்ச்சாகமும் உண்டாகும்.

ரிஷபம்:

நீங்கள் நீண்ட நாள் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.ஒரு சிலருக்கு தொழிலில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.இன்று மூன்றாம் நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

மிதுனம்:

செய்த தவறை எண்ணி மனம் வருந்துவீர்கள்.மனைவி வீட்டு வழியே நல்ல ஆதாயம் கிடைக்கும்.உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள்.இறைவழிபாடு நன்மை சேர்க்கும்.

சிம்மம்:

தடைகளைத் தாண்டி வெற்றி அடைவீர். வரவேண்டிய பணம் வரும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். விருப்பம் பூர்த்தியாகும் நாள்.வாழ்க்கைத் துணையின் ஆதரவு அதிகரிக்கும்.

கன்னி:

இன்று உங்கள் வேலையில் சில சிக்கல் உருவாகும்.எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படவேண்டும்.பலரும் அவர்களின் உடல்நிலையை சரியாக பராமரிப்பதால் நன்மை பெறலாம்.

துலாம்:

மனதில் சில குழப்பங்கள் உருவாகும்.தாய் வழி உறவால் ஆதாயம் பெறுவீர்கள்.ஒரு சிலருக்கு வேலையில் இடம் மாற்றம் உண்டாகும்.உடல் உபாதைகள் சரி ஆகும்.பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

மகாசிவராத்திரியில் 12 ராசிகளும் சிவபெருமானுக்கு செய்யவேண்டிய அபிஷேகம் பொருட்கள்

மகாசிவராத்திரியில் 12 ராசிகளும் சிவபெருமானுக்கு செய்யவேண்டிய அபிஷேகம் பொருட்கள்

விருச்சிகம்:

மனதில் உற்சாகம் உண்டாகும். தொழிலில் இருந்த தடை விலகி வருமானம் அதிகரிக்கும். முன்னோரை வழிபட நன்மை அதிகரிக்கும்.பணிபுரியும் இடத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

தனுசு:

உங்கள் செயலில் வேகம் இருக்கும். கையில் எடுத்த வேலையை செய்து முடிப்பீர். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாள்வீர்.

மகரம்:

குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் முயற்சி லாபமாகும். வரவு செலவில் ஏற்பட்ட குளறுபடியை சரி செய்வீர். நம்பிக்கை அதிகரிக்கும்.குடும்பத்தினர் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்.

கும்பம்:

குழப்பம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பதும் விவேகத்துடன் செயல்படுவதும் நல்லது.பணியாளர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும்.வெளியூர் பயணத்தில் நெருக்கடிகளை சந்திப்பீர்.

மீனம்:

மூன்றாம் நபரால் உங்கள் குடும்பத்தில் சில குழப்பங்கள் உண்டாகலாம்.நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும்.குலதெய்வ வழிபட்டால் நன்மை அடைவீர்கள்.பிறரிடம் உதவி கேட்பதை தவிர்க்க வேண்டும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US