ஜோதிடம்: உங்கள் ராசிக்கு பொருத்தமான திருமண ராசிகள் யார் தெரியுமா?

By Sakthi Raj Jun 09, 2025 11:47 AM GMT
Report

 மனிதர்கள் வாழ்க்கையில் திருமணம் என்பது மிகவும் அவசியமான ஒன்று. அப்படியாக என்னதான் மனப்பொருத்தம் என்று சொன்னாலும் ஒவ்வொருவர் ராசிக்கும் ஏற்ற பொருத்தமான ராசிகள் இருக்கிறது.

அவர்கள் இருவரும் வாழ்க்கையில் இணையும் பொழுது அவர்கள் வாழ்க்கை எந்த தடையும் தடங்களும் இல்லாமல் செல்வதாக சொல்லப்படுகிறது. அப்படியாக, ஒவ்வொரு ராசிக்கும் ஏற்ற பொருத்தமான திருமண ராசிகள் யார் என்று பார்ப்போம்.

உங்களின் அதிர்ஷ்ட எண் எது தெரியுமா? இதோ உங்கள் கிழமையை வைத்து தெரிந்து கொள்ளுஙகள்

உங்களின் அதிர்ஷ்ட எண் எது தெரியுமா? இதோ உங்கள் கிழமையை வைத்து தெரிந்து கொள்ளுஙகள்

 

மேஷம்:

மேஷ ராசிகாரர்களுக்கு மிகவும் பொருத்தமான ராசியாக கும்ப ராசி இருக்கிறது. இவர்கள் இருவரும் வாழ்க்கையில் இணையும் பொழுது அவர்கள் இருவரும் புது தேடுதல் வழியாக வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.

ரிஷபம்- கடகம்:

இந்த இரண்டு ராசிகளும் திருமணம் செய்து கொள்ளும் பொழுது அவர்கள் இருவரும் நல்ல புரிதலோடு சிறப்பான வாழ்க்கையை வாழ்கிறார்கள். இருவரும் இணைந்து வாழ்க்கையில் முன்னேற்ற பாதையில் பயணிக்கிறார்கள்.

மிதுனம்-கும்பம்:

இந்த இரண்டு ராசிகளும் மிகவும் புத்திசாலியான மற்றும் திறமை வாய்ந்த ராசிகள் ஆவார்கள். இவர்கள் வாழ்க்கையில் ஒன்று சேரும் பொழுது இவர்களுக்கு எல்லாம் வெற்றியாக அமைகிறது.

கடகம் - மீனம்:

இவர்கள் ஒன்று இணையும் பொழுது இவர்களுக்கான புரிதல் மிக சிறப்பாக அமைகிறது. இருவரும் நீண்ட வருடம் எந்த ஒரு சண்டை இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.

சிம்மம்-தனுசு:

இந்த இரண்டு ராசிகளின் விருப்பங்களும் ஒரே போல் இருக்கும். ஆதலால் இவர்கள் ஒன்று இணையும் பொழுது மிக பெரிய கருத்து வேறுபாடுகள் இவர்களுக்கு இடையில் வருவதில்லை.

கன்னி-ரிஷபம்:

இந்த இரண்டு ராசிகளும் மிகவும் நேர்மையான குணம் கொண்டவர்கள். இவர்கள் இருவரும் இணையும் பொழுது அவர்கள் வாழ்க்கை மிகவும் சிறப்பாகவும் நல்ல புரிதலோடும் அமைகிறது.

துலாம் - மீன ராசி:

இவர்கள் இருவரும் நண்பர்கள் போல் பழகும் ராசிகள். இவர்கள் இருவரும் ஒன்று சேரும் பொழுது நல்ல கருத்துக்கள் கொண்டு சிறப்பாக அமைகிறது.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US