செல்வம் சேர்க்கும் புரட்டாசி சனிக்கிழமை மாவிளக்கு வழிபாடு

By Sakthi Raj Sep 21, 2024 11:00 AM GMT
Report

புரட்டாசி என்றாலே பெருமாள் வழிபாடு தான்.அதிலும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு இன்னும் சிறப்பான நாளாக கருதப்படுகிறது.அன்றைய தினத்தில் பெருமாளுக்கு வீடுகளில் மாவிளக்கு போடும் வழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது. இதற்கு பின்னால் ஒரு அழகான குட்டி கதை ஒன்றும் இருக்கிறது.அதை பற்றி பார்ப்போம்.

முன்பு ஒரு காலத்தில் திருமலையில் வாழ்ந்த சில முனிவர்கள் அங்கிருந்த ஒரு மரத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாளை வழிபட்டு வந்தார்களாம். அதைக் கண்ட ஒரு வேடன் அவர்களிடம் சென்று, ஏன் இந்த மரத்தை வழிபாடு செய்கிறார்கள் என்று கேட்க அதற்கு முனிவர்கள், உங்களைப் போன்ற வேடுவர்களுக்கு அருள்புரிவதற்காகவே பெருமாள் இப்படி மரத்தின் வடிவில் இங்கு காட்சி தருகிறார்! என்று விடையளித்தார்கள்.

என் போன்ற எளியவனுக்கும் அருள் புரிவதற்காக இந்த வடிவில் பெருமாள் வந்திருக்கிறாரா? என்றெண்ணிப் சந்தோசம் அடைந்த அந்த வேடன், அடுத்த நாள் முதல் வேட்டைக்கு வருகையில், தேனும் தினைமாவும் கொண்டு வந்து மரத்திலுள்ள பெருமாளுக்குச் சமர்ப்பிப்பதை வழக்கமாகக் கொண்டான்.

செல்வம் சேர்க்கும் புரட்டாசி சனிக்கிழமை மாவிளக்கு வழிபாடு | Mavillaku Valipadu Palangal

பிறகு திருமாலின் அருளால் அந்த வேடனுக்கு ஒரு மகன் பிறந்தான். மகனுக்கு விவரம் வந்த பின் அவனையும் தன்னோடு மலைக்கு அழைத்து வந்து மரத்திலுள்ள பெருமாளுக்குத் தேனும் தினைமாவும் படைத்து வழிபட்டு வந்தான் வேடன். இந்நிலையில் ஒருநாள் வேடன் தேன் கொண்டு செல்ல மறந்துவிட்டான்.

இன்று மறக்காமல் வீட்டில் மஹாபரணி எம தீபம் ஏற்றுங்கள்

இன்று மறக்காமல் வீட்டில் மஹாபரணி எம தீபம் ஏற்றுங்கள்


மரத்துக்கு அருகில் சென்று தன் பையைப் பிரித்துப் பார்த்த போது, தினைமாவு மட்டுமே இருப்பதைக் கண்ட வேடன், அந்தப் பையைத் தன் மகனிடம் கொடுத்து, இங்கேயே இரு! நான் தேன் கொண்டு வந்து விடுகிறேன்! தேனையும் தினைமாவையும் பெருமாளுக்குச் சமர்ப்பித்து விட்டு அதன்பின் நாம் சாப்பிடுவோம்!” என்று சொல்லிவிட்டுத் தேனைத் தேடிச் சென்றான்.

வேடவன் வருவதற்கு நீண்ட நேரம் ஆனபடியால், பசி தாங்காத அவனது மகன், வெறும் தினைமாவைப் பெருமாளுக்குச் சமர்ப்பித்து விட்டு, அதை உண்ணப் போனான். அப்போது தேனுடன் வந்த வேடன் மகனின் செயலைக் கண்டு கோபம் கொண்டு அவனை அடிக்கப் போனான்.

செல்வம் சேர்க்கும் புரட்டாசி சனிக்கிழமை மாவிளக்கு வழிபாடு | Mavillaku Valipadu Palangal

ஆனால் பின்னால் இருந்து ஒரு கை வேடவனின் கையைத் தடுத்தது. திரும்பிப் பார்த்தால் சாட்சாத் பகவானே நின்று கொண்டு இருந்திருக்கிறார்.

பெருமாள் வேடவனை பார்த்து உன் மகன் படித்த தினைமாவில் தேன் கலக்கவில்லை என்று யார் சொன்னது? அவன் தினைமாவோடு சேர்த்து, பக்தி என்னும் தேனைக் கலந்து எனக்கு அர்ப்பணித்தான். அதை நான் ஆனந்தமாக உண்டுவிட்டேன்!என்று கூறினார் பகவான்.

திருமாலைத் தரிசித்துப் பரவசமடைந்த வேடவனும் அவன் மகனும் திருமலையப்பனின் திருவடிகளில் விழுந்து பணிந்து அருள் பெற்றார்கள் என்பது வரலாறு.

இந்தச் சம்பவம் நடைபெற்ற நாள் புரட்டாசி மாதச் சனிக்கிழமை ஆகும். அதனால் தான் புரட்டாசி சனிக்கிழமைகளில், அந்த வேடுவன் சமர்ப்பித்த தினைமாவுக்கு இணையாக அரிசி மாவும், தேனுக்கு இணையாக வெல்லமும் கலந்து மாவிளக்கு போடும் வழக்கம் ஏற்பட்டது.

இதனை செய்வதால் குடும்பத்தில் சந்தோசம்,வீட்டில் நிலையான செல்வம் ஏற்படும் என்பது நம்பிக்கை. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US