ரிஷப ராசியில் சூரிய பகவான்- விபரீத ராஜ யோகம் யாருக்கு?
சூரிய பகவான் மாதம் ஒரு முறை அவருடைய ராசியை மாற்றுகிறார். அப்படியாக, வருகின்ற மே 15 ஆம் தேதி சூரியன் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு செல்கிறார். சூரியன் ரிஷப ராசியில் நுழைவதால் 12 ராசிகளுக்கும் கட்டாயம் ஒருவித தாக்கம் உண்டாகும். இருந்தாலும் அவரின் அந்த மாற்றம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கே சாதகமாக அமைய உள்ளது. அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசிக்கு சூரியனின் இந்த ரிஷப ராசி மாற்றம் மனதில் தெளிவை உண்டு செய்ய போகிறது. சூழ்நிலையால் வலிமை இழந்து காணப்பட்டவர்கள், இந்த காலக்கட்டத்தில் தன்னம்பிக்கையோடு செயல்படுவார்கள். பண வரவில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு சூரியனின் இந்த பெயர்ச்சி மிக சிறந்த பலனை கொடுக்க காத்திருக்கிறது. போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது மிகவும் சாதகமான காலம் ஆகும். குடும்பத்தில் உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும். வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு சூரிய பகவானின் இந்த பெயர்ச்சி வாழ்க்கையில் நேர்மறை சிந்தனையை உண்டு செய்யும், சிலருக்கு வேலை செய்யும் இடத்தில் நற்பெயர் பதவி உயர்வு கிடைக்கும். சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகள் நல்ல முடிவை பெரும்.
கும்பம்:
கும்ப ராசிகாரர்களுக்கு சூரிய பகவானின் இந்த பெயர்ச்சி காதல் உறவில் உள்ள சிக்கலை சரி செய்யும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். திருமண வரன் தேடுபவர்களுக்கு நல்ல வரன் அமையும். வேலையில் இடமாற்றம் செய்யவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நினைத்த இடத்தில் வேலை கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |