அரோகரா என்பதின் பொருள் தெரியுமா?
நாம் ஒவ்வொரு தெய்வங்களை வழிபாடு செய்யும் பொழுது அந்த தெய்வங்களின் நாமங்களை சொல்லி வழிபாடு செய்வோம்.அப்படியாக நாம் கலியுக வரதன் முருகப்பெருமானை வழிபாட செய்யும் பொழுது அரோகரா என்று சொல்லி வழிபாடு செய்வதுண்டு.
அப்படியாக அதன் பொருள் என்ன என்பதை யாரும் சிந்தித்தது இல்லை.இப்பொழுது அரோகரா என்ற நாமத்தின் அர்த்தத்தை பற்றி பார்ப்போம்.
அரோகரா அதில் ரோகம் என்றால் நோய் அரோகம் என்றால் நோயில்லாமல் அரன் என்றால் காப்பவன் ஹர என்றால் நீக்குபவன் என்ற பொருள் ஆகும். இறைவனே,அவனை வழிபட நோய் நொடிகளை நீக்கி துன்பங்களில் இருந்து காத்து நற்கதி அருள்வாயாக’என்பதாகும்.
அர ஹரோ ஹரா என்றும் அரோஹரா என்றும் முன்பு, சைவர்கள் இதனைச் சொல்வது வழக்கமாயிருந்தது. திருஞானசம்பந்தர் ஒருமுறை பல்லக்கில் அமர்ந்து பயணம் செய்யும்போது, அவரைச் சுமந்து கொண்டு வந்தவர்கள் ‘ஏலே லோ ஏலே லோ’ என்று களைப்பைக் குறைப்பதற்காக பாடிக்கொண்டு வந்தனர்.
இதை கேட்டு கொண்டு வந்த திருஞானசம்பந்தர், பொருளற்ற ஒன்றைச்சொல்வதை விட பொருளோடு ஒன்றைச் சொன்னால் நல்லது என்று, ‘அர ஹரோ ஹரா’ என்பதைக் கற்றுக்கொடுத்தார். அதன் பிறகு ‘அர ஹரோ ஹரா’ என்றுச் சொல்வது வழக்கமாயிற்று.
இன்னும் சொல்லப்போனால் அரோகரா என்பதை,அர+ஓ+ஹரா என பிரிக்கலாம்,அதாவது அரண்,ஹரண் இரண்டுமே சிவனின் பெயரை குறிப்பதாகும் இருந்தாலும அவர் புதல்வர் மீது கொண்டுள்ள பற்றற்ற ஆசையினால் முருகனடியார்கள், முருகனை வணக்கும்போது அரோகரா என்கின்றனர்.
காலப்போக்கில் சைவர்கள் இதனைச் சொல்லும் பழக்கம் குறைந்தது. ஆனால், (முருகனடியார்கள்) ‘கௌமாரர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்றுச் சொல்லி வந்ததால் இச்சொற்கள் முருகனோடு இணைந்துவிட்டன.
முருக பக்தர்கள் முருகப்பெருமானை வணங்கும் பொழுது வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று சொல்லி வணங்குவதுண்டு.அதாவது முருகன் அருளால் தங்கள் வாழ்வில் உள்ள துன்பங்கள் விலகி வெற்றிகள் பெறவேண்டும் என்று வேண்டிக்கொள்வது ஆகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |