குல தெய்வம் கனவில் வருவதால் நல்லதா?கெட்டதா?
நம்முடைய வீட்டின் பாதுகாப்பு குலதெய்வம்.பலருக்கும் என்னதான் இஷ்ட தெய்வங்கள் இருந்தாலும் ஏதேனும் பிரச்சனை பயம் என்றால் குலதெய்வத்தை தான் அவர்கள் முதலில் நினைத்து கொள்வார்கள்.அப்படியாக தினமும் காலையில் வேலைக்கு செல்லும் பொழுது குலதெய்வத்தை வழிபாடு செய்து தான் கிளம்புவார்கள்.
இவ்வாறு இவ்வளவு பக்தியும் அன்பும் கொண்ட குலதெய்வம் நம் கனவில் திடீர் என்றால் வந்தால் நாம் முதலில் நினைத்து கொள்வது குலதெய்வம் நம்மிடம் ஏதோ செய்தியை அறிகுறி காண்பிக்க வந்திருக்கிறது என்று.அப்படியாக குலதெய்வம் கனவில் வந்தால் அது நல்லதா கெட்டதா என்று பார்ப்போம்.
நம்முடைய குலதெய்வம் கனவில் வந்தால் அவை நல்ல குறியே.குலதெய்வம் கனவில் வர நம்முடை வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கப் போகிறது என்று அர்த்தம். அதுமட்டுமின்றி, தொழில் செய்பவர்கள் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள்.
நீங்கள் நீண்ட நாள் எதிர்பார்த்து வேண்டிய காரியம் நிறைவடைந்து வெற்றி பெறுவீர்கள். இதை தவிர்த்து நாம் ஏதேனும் காரணத்தால் வேலை பளுவால் சங்கடத்தால் குலதெய்வத்தை மறந்து போகும் வாய்ப்புகளும் உண்டு.அவ்வாறு மறந்து போகும் வேளையில் குலதெய்வம் நினைவூட்டும் விதமாகவும் குலதெய்வம் கனவில் வ்ருவதற்கு வாய்ப்புகள் உண்டு.
அதுமட்டுமின்றி, குலதெய்வ கோவில் கனவில் வந்தால் நீங்கள் மனதில் நினைத்த காரியம் நல்லபடியாக முடியும் என்பதை குறிக்கிறது.மேலும் சமயங்களில் ஏதேனும் பிரச்சனையால் நாம் மனம் குழம்பி மனம் வருத்தம் அடைவதுண்டு.
அவ்வாறு மனவருத்தம் கொள்ளும் பொழுது நம்மை தைரியம் ஆக்கவும் குலதெய்வம் கனவில் வர வாய்ப்புகள் உள்ளது. கனவில் குலதெய்வத்தை வழிபடுவது போல் வந்தால் வெளிவட்டாரத்தில் உங்களது மதிப்பும், கௌரவமும் கூடும் என்று அர்த்தம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |