செல்வம் வளம் அருளும் மீனாட்சி அம்மன் கோயில் விபூதி விநாயகர்
வினை தீர்ப்பவர் விநாயகர்.இவரை வழிபட இல்லை என்ற சொல்லுக்கே இடம் இல்லை.எல்லாம் வளமும் தந்து அருள்வார்.அப்படியாக விநாயக பெருமான் பல வடிவங்களில் நமக்கு காட்சி கொடுத்து அருள்பாலித்து வருகிறார்.
அந்த வகையில் மதுரை ஆளும் மீனாட்சி அம்மன் கோயிலில் பொற்றாமரை குளக்கரையில் கன்னிமூலையான தென்மேற்கில் இவர் வீற்றிருக்கிறார் இந்த விபூதி விநாயகர்.
பலரும் இவரின் சக்தியும் அருமையும் அறியாமல் மிக சாதாரணமாக கடந்து வர வாய்ப்புகள் இருக்கிறது.இப்பொழுது இந்த விபூதி விநாயகரின் விசேஷங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
இங்கு என்ன சிறப்பு என்றால் பக்தர்கள் தங்கள் கைகளாலேயே திருநீறு அபிஷேகம் செய்து இவரை வழிபாடு செய்யலாம்.
மகம், உத்திரம், விசாகம், கேட்டை, பூராடம் நட்சத்திர நாட்களில் இவருக்கு திருநீற்றால் அபிஷேகம் செய்ய, எண்ணிய எண்ணம் விரைவில் நிறைவேறும் என்பது ஐதீகம்.
இந்த விபூதி விநாயகர் மன்னர்கள் காலத்தில்பெயர் தெரியாத ஒரு சிற்பி, இக்கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் தாங்களே அபிஷேகம் செய்து கொள்ளும் வகையில் விநாயகர் சிலையை ஏற்பாடு செய்து தரவேண்டும் என மன்னரிடம் கோரிக்கை விடுதிருக்க வேண்டும் என்று எண்ண படுகிறது.
அதன் அடிப்படையில் இந்த விபூதி விநாயகர் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். மேலும் பக்தர்கள்,சிறப்பு வாய்ந்த இந்த விபூதி விநாயகருக்கு தாங்களே விபூதி வாங்கி வந்து தாங்கள் கைகளால் அபிஷேகம் செய்கிறார்கள்.
அவ்வாறு அபிஷேகம் செய்தால் செல்வம் சேரும் என்பது அவர்களது நம்பிக்கை. விபூதி என்றால் `மேலான செல்வம்’ என்பது பொருள்.
இவரை வணங்கினால், வாழும் காலத்தில் பெரும் பொருளும், வாழ்க்கைக்கு பிறகு மோட்சம் என்னும் பிறவா நிலை செல்வமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
நமக்கு உலகில் சிறந்த என்ன செல்வம் வேண்டும்?.இவர் கொடுக்கும் பிறவா வரமே போதுமானது அல்லவா ?ஆதலால் நாம் மதுரை சென்றால் இவரை இதுவரை கவனிக்காமல் மறந்து இருந்தால் ,மறு வாய்ப்பாக மதுரை செல்லும் பொழுது விபூதி விநாயகரை வழிபட்டு வாழ்க்கையில் எல்லா வள செல்வமும் பெறுவோமாக.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |