கடன் தொலையில் இருந்து விடுபட எளிய பரிகாரம்
காலம் ஓடும் வேகத்தில் பொருளாதார உயர்வும் அதிகமாகி கொண்டே இருக்கிறது.
இதில் பலராலும் தன் வருமானத்திற்குள் குடும்பம் நடந்த இயலாமல் கடன் வாங்கி தவித்து வருகின்றனர்.
இந்த பிரச்சனையில் இருந்து விடுபட பலரும் பல முயற்சிகள் செய்தாலும், சிக்கனமாக செல்வுகளை குறைத்து கடன் வாங்காமல் வாழமுடியாமல் போகிறது.
நம் அறிவை மீறி சில விஷயங்கள் நடக்கும் பொழுது இறைவழிபாடு கை கொடுக்கும்.
கடன் தொலையில் இருந்து விடுபட சில பரிகாரம் செய்து தீர்வு காணலாம் என நம்பப்படுகிறது .
அதாவது தொடர்ந்து மூன்று பௌர்ணமி நாட்களில் குலதெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும்.
குல தெய்வ கோயில் அருகில் இல்லாவிட்டாலும் வீட்டிலேயே குலதெய்வம் இருக்கும் திசை நோக்கி ஐந்து முக தீபம் ஏற்றவேண்டும்.
இப்படி தொடர்ந்து ஒன்பது பௌர்ணமி வழிபட்டு வந்தால் கடன் தொல்லை விலகும்.
மேலும் வீட்டில் லட்சுமி நரசிம்மர் படம் வைத்து வழிபடலாம். லட்சுமி நரசிம்மரிடம் நாம் நம்முடைய கடன் அடைய வழிகாட்டுங்கள் என மனதார வேண்டிக்கொள்ள ஒரு மண்டல காலத்திற்கு அதாவது 48 நாள் பானகம் அல்லது காய்ச்சிய பால் நெய்வேத்தியம் செய்து பிரசாதமாக சாப்பிடவேண்டும்.
மேலும் நாம் வாங்கிய கடனை குளிகை நேரத்தில் திரும்ப செலுத்த ஆரம்பிக்க வேண்டும், அப்படி செய்வதால் விரைவில் நாம் கடனை அடைத்துவிடலாம் என நம்பப்படுகிறது.