குரங்கால் கிடைத்த அறிவு
மனிதர்கள் நாம் பல குணங்கள் வைத்திருக்கிறோம்.அந்த குணம் சில நேரங்களில் நமக்கு நல்லதாகவும் சில நேரங்களில் நமக்கு கெட்டவையாகவும் அமைந்து விடும்.அப்படியாக திருவண்ணாமலையில் ரமண மகரிஷி அவர்களின் ஆஸ்ரமத்தில் உபதேசம் செய்து கொண்டு இருந்தார்.
அப்பொழுது வெளிநாட்டில் இருந்து ரமண மகரிஷி அவர்களின் உபதேசம் கேட்க வந்த நபர் ஒருவர் தரையில் அமர முயற்சித்தார்.ஆனால் அவருக்கு வயது முதிர்வு காரணத்தால் அவரால் காலை கீழே மடக்கி உட்கார முடியவில்லை.
ஆதலால் அவர் வெளியில் இருந்து ஒரு நாற்காலி எடுத்து வந்து போட்டு அமர்ந்தார்.ஆனால் அந்த வெளிநாட்டு நபருக்கு உபதேசம் செய்யும் குருநாதர் கீழும் பக்தர்கள் ஆசனத்திலும் உட்கார கூடாது என்பதை அவருக்கு தெரியாது.
சிறிது நேரம் கழித்து இந்த வெளிநாட்டு நபர் நாற்காலியில் அமர்ந்து இருப்பதை கண்ட நிர்வாகி அவரை அழைத்து இவ்வாறு உட்கார கூடாது ஆதலால் கீழே அமருங்கள் என்று சொன்னார்.அதற்கு அந்த வெளிநாட்டு நபர் அவரின் இயலாமையை சொல்ல.
அதற்கு துளியும் மனம் இறங்காத நிர்வாகி தங்களால் கீழே அமர முடியவில்லை என்றால் வெளியே செல்லுங்கள் என்று சொன்னார்.வெளிநாட்டு நபரும் செய்வதறியாது வெளியே கிளம்பினார்.அப்பொழுது ரமண மஹரிஷி அங்கு வந்து என்னப்பா?என்ன ஆச்சு?என்று விசாரித்தார்.
அதற்கு அந்த நிர்வாகி ஒன்றும் இல்லை சுவாமி!இந்த நபருக்கு கால் வழி இருப்பதால் கீழே அமரமுடியாது.ஆதலால் வெளியே போக சொல்லி கொண்டு இருந்தேன் என்று சொல்கிறார்.உடனே அங்கு இருந்த ரமணர் அதோ அந்த மரத்தை அண்ணாந்து பார்.
அங்கு இருக்கும் குரங்கு நமக்கு மேலே உட்காந்து இருப்பதை பார் அதுவும் என்னைவிட உயரமான இடத்தில் தான் உள்ளது.அதையும் வெளியே போக சொல்லுவோமா என்று கேட்க அமைதியுடன் நின்றார் நிர்வாகி.இங்கு யாரும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று யாரும் இல்லை.
ஆதலால் அவரை அழைத்து உள்ளே உட்கார சொல் என்று சொன்னார்.ஆக நமக்கு எடுத்துக்காட்டாக யார் எப்பொழுது அமைவார்கள் என்று தெரியாது.இப்பொழுது குரங்கு நமக்கு நல்ல புத்தி கொடுத்து இருக்கிறது என்று சொன்னார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |