மேஷ ராசியில் சந்திர பகவான்- ராஜ வாழ்க்கை வாழ போகும் 3 ராசிகள்
இன்று நவம்பர் 5ஆம் தேதி கார்த்திகை மாதத்தில் முழு நிலவின் திதியாகும். இன்றைய தினத்தில் விஷ்ணு பகவானும் லக்ஷ்மி தேவியும் ஆளும் கிரகங்களாக இருப்பார்கள். சந்திர பகவான் மேஷத்தில் சஞ்சரிப்பார். இதன் விளைவாக சந்திரனில் சுக்கிரனின் முழு பார்வை ஒரு நல்ல யோகத்தை ஜோதிடத்தில் உருவாக்கும்.
மேலும் சந்திரனிலிருந்து நான்காவது வீட்டில் குரு பகவான் இருப்பது கஜகேசரி யோகத்தை உருவாக்கும். இன்று புதன்கிழமை புதன், செவ்வாய் கிரகத்துடன் இணைகிறது. இவை பல அதிர்ஷ்டமான யோகத்தை உருவாக்குகிறது. இதன் விளைவாக மூன்று ராசிகள் தங்களுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய அதிர்ஷ்டத்தை பெற்று உயர்ந்த நிலைக்கு செல்ல போகிறார்கள். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

கும்பம்:
கும்ப ராசியினர் சில தினங்களாக அவர்களுடைய மனதில் நிறைய குழப்பங்கள் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு மனதில் இருக்கக்கூடிய கவலைகளும் குழப்பங்களும் விலகி நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடிய அமைப்பு உண்டாகும். மேலும் இவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகத்தால் அவர்கள் வாழ்க்கையில் மிகச்சிறந்த ஏற்றத்தை பெறப்போகிறார்கள். நண்பர்கள் இவர்களுக்கு மிகவும் உதவியாக இருப்பார்கள்.
கடகம்:
கடக ராசியினர் நீண்ட நாட்களாகவே பொருளாதாரத்தில் சில சிக்கல்களை சந்தித்து வருகிறார்கள். அவர்களுக்கு அந்த சிக்கல்கள் எல்லாம் விலகி வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் கிடைக்கப்போகிறது. அரசு வழியில் இவர்களுக்கு நல்ல ஆதாயம் பெற போகிறார்கள். குடும்ப வாழ்க்கையில் இவர்களுக்கு மன அமைதியும் நிம்மதியும் பெறக்கூடிய அற்புதமான காலகட்டமாகும். பிள்ளைகளுடைய எதிர்காலத்தை பற்றிய கவலைகளும் பயமும் விலகக்கூடிய அமைப்பு உண்டாகும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாகவே தங்களுடைய சொந்த வாழ்க்கையை பற்றிய குழப்பங்கள் மனதில் அதிக அளவில் ஓடிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு அந்த குழப்பங்கள் எல்லாம் விலகி வாழ்க்கையில் ஒரு தெளிவான முடிவை எடுத்து முன்னோக்கி செல்லக்கூடிய ஒரு அற்புதமான காலகட்டமாகும். தொழில் ரீதியாக இவர்கள் சமுதாயத்தில் நற்பெயரை பெறுவார்கள். அது மட்டும் இல்லாமல் பொருளாதாரத்தில் இவர்கள் எடுக்கின்ற முயற்சியில் நல்ல லாபம் உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |