இந்த ராசியில் பிறந்தவர்கள் ஒருவரை யோசிக்காமல் காயப்படுத்திவிடுவார்களாம்
ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கிறது. அப்படியாக, ஒரு சில ராசியில் பிறந்தவர்கள் ஒருவரை காயப்படுத்துவதற்கு தயங்க மாட்டார்கள். அதேபோல் சரியான நேரம் பார்த்து பழி வாங்கக் கூடியவர்களாக இருப்பார்கள். அந்த நபரிடம் இருந்து நாம் அவ்வாறான ஒரு செயலை நிச்சயமாக எதிர்பார்த்து இருக்க மாட்டோம்.
அந்த அளவிற்கு எந்த ஒரு தயக்கமும் எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் ஒருவரை காயப்படுத்தி விடுவார்கள். இதற்கு அவர்களுடைய ராசியின் அதிபதிகள் காரணமாக இருக்கிறார்கள்.
அதாவது எந்த ஒரு விஷயத்தையும் யோசிக்காமல் அவசரமாக செய்யக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அப்படியாக, எந்த ராசியில் பிறந்தவர்கள் ஒருவரை எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் காயப்படுத்தக்கூடியவர்கள் என்று பார்ப்போம்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் ஒருவரை காயப்படுத்துவதை பற்றி அவர்கள் வருத்தப்படுவதில்லை. அவர்கள் மனநிலை அந்த நேரத்தில் சந்தோஷமாக இருந்தால் போதும் என்று எண்ண கூடியவர்கள்.
அதேபோல் இவர்களிடம் அதிக அளவில் பழிவாங்கக்கூடிய எண்ணம் இருக்கும். இவர்களிடம் நட்பாக இருப்பதோ அல்லது வாழ்க்கை துணையாக இருப்பதோ சற்று கடினமான ஒன்றுதான். இவர்களைப் புரிந்து கொண்டு அனுசரித்து செல்வது அவசியமாக இருக்கிறது.
கன்னி:
கன்னி ராசியை பொறுத்தவரை இவர்கள் எல்லா விஷயத்தையும் ஆழமாக கவனிப்பார்கள். ஆனால் அவர்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை வெளிப்படையாக முக பாவனைகளில் காட்டிக்கொள்ள மாட்டார்கள்.
இருப்பினும் நேரம் பார்த்து ஒருவரை காயப்படுத்துவதில் வல்லவர்களாக இருக்கிறார்கள். ஆதலால் இந்த கன்னி ராசியை நம்பி நம் எந்த ஒரு ரகசியமோ அல்லது எந்த ஒரு காரியமும் செய்வது சற்று சவாலானது தான்.
மகரம்:
மகர ராசி பொறுத்த வரை இவர்கள் கடினமான உழைப்பாளிகள். இவர்கள் யாரிடமும் சென்று வம்பு வைத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் இவர்களை யாராவது சீண்டி பார்த்து விட்டால் அந்த நபரை இவர்கள் கட்டாயமாக சும்மா விட மாட்டார்கள்.
ஒரு சிலர் அவர்களுடைய காயங்கள் மறந்த பிறகு அமைதி ஆகிவிடுவார்கள்.ஆனால் மகர ராசி பொருத்தவரை காலம் கடந்தும் தன்னை காயப்படுத்துவர்களுக்கு தக்க பதில் கொடுக்கும் வரை இவர்கள் ஓயமாட்டார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |