2026 ராகு பெயர்ச்சி: இன்று முதல் 3 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்.. உங்கள் ராசி உள்ளதா?
ஜோதிட ரீதியாக கிரகங்கள் ஒவ்வொரு கால இடைவேளையில் அவர்களுடைய இடத்தை மாற்றுகிறார்கள். அந்த மாற்றம் தனிநபர் வாழ்க்கையில் துவங்கி உலகளாவிய மாற்றங்களை கொடுக்கிறது. ஜோதிடத்தில் ராகு மற்றும் கேது பகவான் நிழல் கிரகமாக இருக்கிறார்கள்.
அந்த வகையில், மே 31ஆம் தேதி அன்று ராகு பகவான் சதயம் நட்சத்திரத்திற்கு இடம் மாறுகிறார். இந்த இடமாற்றம் மிகவும் சக்தி வாய்ந்தது. இதனால் மிக பெரிய அளவில் தாக்கத்தை ஜோதிட ரீதியாக உண்டு செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் ஒரு சில ராசிகளுக்கு எதிர்ப்பாராத பொருளாதார முன்னேற்றம், அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. அப்படியாக ராகு பெயர்ச்சியால் யாருக்கு பொற்காலம் ஆரம்பம் என்று பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த ராகு பெயர்ச்சி இவர்களுக்கு மிக பெரிய அளவில் நன்மை செய்யப்போகிறார். இந்த காலகட்டம் நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பிரச்சனைகள் முடிவிற்கு வரும்.
வருமானத்தில் நல்ல உயர்வை பெறுவீர்கள். வேலை செய்யும் இடத்தில உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவார்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு ராகுவின் பெயர்ச்சி இவர்களுக்கு மிக பெரிய அளவில் உயரத்தையும் செல்வாக்கையும் கொடுக்கப்போகிறது. வேலை செய்யும் இடங்களில் உங்களுக்கு அங்கீகாரமும் பாராட்டுக்கள் கிடைக்கும்.
ஒரு சிலருக்கு திடீர் பொறுப்புகள் தேடு வரும். வருமானம் உயர்த்துவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். பழைய கடன்கள் அடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். கூட்டு தொழிலில் நல்ல முயற்சிகளும் வெற்றிகளும் கிடைக்கும்.
கும்பம்:
கும்பம் ராசிக்காரர்களுக்கு ராகுவின் பெயர்ச்சி இவர்களுக்கு நேரடியாக மிகப்பெரிய அளவில் அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகிறது. இவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் மற்றும் பூர்வீக சொத்துக்களில் இருந்து பணங்கள் கைகளுக்கு வரும் காலகட்டம்.
நீண்ட நாட்களாக வெளிநாடு செல்ல வேண்டும் அல்லது புதிய தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உருவாகும். நண்பர்கள் வழியாக இவர்களுக்கு நற்செய்தியும் நண்பர்களுடன் தொழில் செய்வதற்கான அமைப்பும் உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |