இந்த ராசியில் பிறந்தவர்கள் நண்பருக்காகவே உயிர் வாழ்வார்களாம்.. நீங்க என்ன ராசி?
அனைவரின் வாழ்கையிலும் உணவு, உடை, இருப்பிடம் போன்று நண்பர்களும் அவசியமான தேவைகளில் ஒன்று தான்.
மனிதர்களின் வாழ்க்கை பற்றி பகிர்ந்து கொள்வதில் நண்பர்கள் முதல் இடத்தில் இருக்கிறார்கள். நல்ல நண்பர்கள் அமைந்து விட்டால் ஒருவரின் வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருக்கும்.
அனைவருக்கும் நல்ல நண்பர்கள் கிடைப்பார்களா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் கூற வேண்டும்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் பலருக்கு மிகவும் நட்பானவர்களாகவும் அற்புதமான நண்பர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் மற்றவர்களுடன் எளிதில் பழகி நல்ல நண்பர்களாக இருப்பார்கள்.
யாருடன் வேண்டுமென்றாலும் அவர்களால் வலுவான நட்பை உருவாக்க முடியும். பார்ப்பதற்கு வசீகரமும் நன்றாகக் கேட்கும் திறனும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் நண்பராகவும் இருப்பார்கள்.
அந்த வகையில், சிறந்த நண்பர்களாக இருப்பவர்கள் எந்தெந்த ராசிகளில் பிறந்திருப்பார்கள் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
மேஷம் | மேஷ ராசியில் பிறந்தவர்கள் சாகசம் செய்பவர்களாக இருப்பார்கள். இதனால் மற்றவர்கள் இவர்களிடம் நட்பு வைத்து கொள்ள விரும்புவார்கள். உரையாடல் தொடங்கினால் தன்னம்பிக்கை கொண்டவர்களாக பேசுவார்கள். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் இவர்களிடம் புதிய விடயங்கள் அதிகமாக இருக்கும். |
மிதுனம் | மிதுன ராசியில் பிறந்தவர்கள் இரட்டை ஆளுமைக் கொண்டவர்களாகவும், ஆர்வமுள்ளவர்களாகவும் இருப்பார்கள். சூழ்நிலைக்கு ஏற்றால் போல் மற்றவர்களுடன் மகிழ்ச்சியுடன் பழகுவார்கள். உற்சாகம் நிறைந்த இவர்களை சுற்றி எப்போதும் ஒரு கூட்டமே இருக்கும். ஈர்க்கும் ஆற்றல் இவர்களை வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும். |
துலாம் | துலாம் ராசிக்காரர்கள் அனைவரின் வாழ்க்கையிலும் நிம்மதியையும், சமநிலையையும் உருவாக்க முயற்சி செய்வார்கள். தங்கள் உறவுகளிடம் அமைதியாகவும் நல்லிணக்கத்துடனும் நடந்து கொள்வார்கள். தங்களை விட மற்றவர்கள் மீது அதிகமான அக்கறை காட்டுவார்கள். உதவி செய்வதற்கான வழிகளை அவர்களே கண்டுபிடித்து உதவிச் செய்வார்கள். அன்பான இயல்பு மற்றும் மற்றவர்களின் கண்ணோட்டங்களையும் புரிந்துகொள்ளும் உணர்வு காரணமாக பலரும் நட்பு வைத்து கொள்வார்கள். |
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |