எதிர்ப்புகள் போட்டி பொறாமை விலக முனீஸ்வரன் வழிபாடு செய்வது எப்படி?
ஒருவருக்கு போட்டி பொறாமைகள் ஏற்பட்டு விட்டால் அந்த நபருடைய வாழ்க்கையில் என்னதான் கடினமாக உழைத்தாலும் நிம்மதி என்பது சில இடங்களில் இல்லாமல் போவதை பார்க்க முடிகிறது.
அந்த வகையில், ஒருவருக்கு எதிர்ப்புகள், போட்டி பொறாமை விலக செய்ய வேண்டிய முனீஸ்வரர் வழிபாட்டை பற்றி பார்ப்போம்.

ஒருவருடைய ஜனன ஜாதகத்தில் லக்னாதிபதி ஆறு, எட்டாம் பாவத்துடன் தொடர்பு பெற்று கண் திருஷ்டி தொல்லை போன்ற எதிர்மறை சக்திகளை சந்தித்து வருகிறார்கள் என்றால் கவலை கொள்ள வேண்டாம்.
உங்கள் ஊருக்கு அருகில் இருக்கக்கூடிய குதிரையுடன் உள்ள முனீஸ்வர பகவான் ஆலயத்திற்கு சென்று சனிக்கிழமை தோறும் காலை 9 முதல் 10 முப்பது வரையிலான ராகு காலங்களில் எலுமிச்சை மாலை சாற்றி உங்கள் பிரச்சனைகளை ஒரு பேப்பரில் எழுதி முனீஸ்வரனின் குதிரையின் வலது காலில் கட்டி விடுங்கள்.
பிறகு எண்ணி 48 நாட்களுக்குள் உங்கள் பிரச்சனை விரைவில் முடிவடைந்து விடுகிறது. இவ்வாறு தொடர்ந்து முனீஸ்வரரை வழிபாடு செய்தால் வாழ்க்கையில் நிம்மதியும் எதிர்ப்புகளும் முற்றிலும் விலகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |