தீராத நோய் தீர பழனி முருகர் வழிபாடு
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். அப்படியாக ஒருவர் நோயின்றி வாழ்தலே அவர்களை சாதனை மனிதனாக மாற்றும்.
அதாவது உடல் சீராக இருந்தால் தான் சிந்திக்க முடியும் எதையும் செய்யும் மனோ தைரியம் வரும். அப்படியாக கலியுக வரதனாக முருக பெருமான் பல இன்னல்களை தீர்த்து வருகிறார்.
அவரை சரண் அடைய பல பிரச்சனைகள் தீரும்.
இதில் நோயின்றி வாழ முருகப்பெருமானை வைத்து தான் இந்த பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது. பழனி முருகன் கோவிலில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.
புதிதாக சிவப்பு நிற காட்டன் ரவிக்கை துணி எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு முறை துவைத்து காய வைத்து விடுங்கள். பிறகு அந்த துணியை 3 துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
சதுர வடிவில் வெட்டிக் கொள்ளுங்கள். ஒரு சிவப்பு நிற தூண்டில், 1 கைப்பிடி நெல், இன்னொரு சிவப்பு நிற துணியில் 1 கைப்பிடி தயிர் சாதம், இன்னொரு சிவப்பு நிற துணியில் 1 கைப்பிடி பச்சரிசி, இந்த மூன்று பொருட்களையும் தனித்தனி துண்டுகளில் தனித்தனியாக வைத்து, அந்த சிவப்புத் துணியை ஒரு நூலால் முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள்.
இந்த மூன்று முடிச்சுகளுக்கு முன்பாக மூன்று மண் அகல் விளக்கு ஏற்றி வைக்கவும். பழனியில் முருகன் கோவிலுக்கு சென்று அந்த முருகனின் சன்னிதானத்தில் இந்த முடிச்சுகளை வைத்து, இந்த முடிச்சுகளுக்கு முன்பாக 3 மண் அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
அந்த முடிச்சுகளை அப்படியே அங்கேயே விட்டு விட்டு வரவும்.மேலும் பழனியில் இருக்கக்கூடிய முருகனின் சிலைக்கு அபிஷேகங்கள் நடக்கும்.
அந்த நவபாஷாண சிலை மேலே அபிஷேகத்திற்காக பயன்படுத்தப்பட்ட பால் தண்ணீர் பஞ்சாமிர்தம் ஏதாவது ஒரு பொருள் உங்களுக்கு கிடைக்க வேண்டும்.
அதிலிருந்து ஒரு சொட்டை நீங்கள் பருகி விட்டால், அன்றிலிருந்து உங்களுக்கு தீராத வியாதிகள் தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை.இந்த பரிகாரத்தை நாங்கள் சொல்லவில்லை.
க
ணக்கன்பட்டி சுவாமிகள் அவர்களால், மக்களின் நலனுக்காக சொல்லப்பட்ட பரிகாரம் தான் இது. இதை அவ்வளவு எளிதாக யாராலும் செய்து விட முடியாது.
ஆனால் உங்களுக்கு வாய்ப்பு கிடைத்து இந்த பரிகாரத்தை செய்து விட்டால் அன்றிலிருந்து உங்களை பிடித்த பிணி விலகிவிடும்.
இந்த பரிகாரத்தை செய்யும் போது அபிஷேக தீர்த்தத்தை பருகும் போது ‘ஓம் ஸ்ரீ போகர் பெருமானே போற்றி போற்றி! ஓம் ஸ்ரீ சண்முகாய நமஹ! ஓம் முருகா!’ என்ற நாமத்தை மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருங்கள்.
உங்கள் உடம்பில் தீரா வியாதியாக அமர்ந்து கொண்டிருக்கும், பிரச்சனைகள் எல்லாம் உங்கள் உடம்பை விட்டு விலகி ஓடிவிடும் என்ற தகவலோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |