காரிய தடை வராமல் இருக்க முருகனின் மந்திரம்

By Sakthi Raj May 28, 2024 01:30 PM GMT
Report

வேல்மாறல் மகா மந்திரம்

திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன்மலை

விருத்தம் என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.

காரிய தடை வராமல் இருக்க முருகனின் மந்திரம் | Murugan Kariya Valipadu Manthiram Thadai News

வேல் மாறலை முழுமையாக படிக்க முடியும் என்பவர்கள் அந்த முருகப்பெருமான் வேலுக்கு முன்பாக அமர்ந்து முழுசாக அந்த பாடல்களை படிக்கலாம்.

முடியாதவர்கள் இந்த 4 வரிகளை, 16 முறை சொன்னாலே போதும். அந்த முருகப்பெருமான் அருள் ஆசியை உங்களால் முழுமையாக பெற முடியும். என்ன வேண்டுதல் வைத்து வேண்டுமென்றாலும் இந்த வேல் மாறலை படிக்க தொடங்கலாம்.

இந்த வேல் மாறலை படிக்கத் தொடங்கிய பின்பு உங்களுக்குள் ஏற்படும் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள். கொஞ்சம் கொஞ்சமாக அந்த முருகப்பெருமான் உங்களுக்குள் வருவதை உணரும் சக்தியை கொடுக்கக் கூடிய பாடல் வரிகள் தான் இவை.

ஜாதக தோஷங்களை போக்கும் சிங்க பெருமாள் நரசிம்மன் கோவில்

ஜாதக தோஷங்களை போக்கும் சிங்க பெருமாள் நரசிம்மன் கோவில்


பூஜை அறையில் சின்னதாக இருக்கும் வேலை வைத்து இந்த பாடலை சொல்லி பூஜை செய்துவிட்டு, தேவைப்பட்டால் அந்த வேலை உங்களுடனே துணைக்கு எடுத்துச் செல்லலாம்.

முக்கியமான வேலைக்கு செல்லும்போது காரிய தடை வராமல் இருக்க இந்த வேல் உங்கள் கையில் இருந்தாலே போதும். தடைகள் விலகும் நினைத்தது நடக்கும்.

வேல் மாறலை பற்றி ஒருவர் சொல்லி தெரிந்து கொள்வதை விட 48 நாள் தொடர்ந்து பூஜை அறையில் அமர்ந்து முருகனை நினைத்து இந்த நான்கு வரிகளை சொல்லிப் பாருங்கள்.

காரிய தடை வராமல் இருக்க முருகனின் மந்திரம் | Murugan Kariya Valipadu Manthiram Thadai News 

உங்கள் வாழ்க்கையில் நடக்காத அதிசயங்கள் நல்ல மாற்றங்கள் எல்லாம் நடக்கும். அது போலவே வேல்மாறல் படிக்கத் தொடங்கிய உடனே உங்கள் வாழ்க்கையில் தீராத துன்பம் வந்துவிட்டால், உடனே வேல்மாறல் படிப்பதை நிறுத்தி விடாதீர்கள்.

முருகன் உங்களுடைய கர்மாக்களை முதலில் கழிக்கின்றான். பிறகு நல்லதை வாரி வாரி கொடுப்பான் என்பது தான் அதற்கு பின்னால் மறைந்திருக்கும் அர்த்தம்.

முருகா முருகா என்ற நாமத்தை சொல்லி அவன் பாதங்களைப் பற்றிக் கொண்டால் நிச்சயம் ஏமாற்றம் கிடையாது என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US