பக்தையிடம் கோபித்து கொள்ளும் முருகன்! நடந்தது என்ன? கதை பாகம்-1
முருகன் என்றாலே அன்பானவன்.முருக பக்தர்கள் தீரா துயர் தாங்காமல் அழுது கொண்டு இருக்க யோசிக்காமல் அவர்கள் முன் வந்து நின்று கண்ணீர் துடைத்து ஆறுதல் வார்தைகள் கூறி துன்பம் தீர்ப்பவன் முருகன்.
அப்படியாக முருகன் பக்தை ஒருவர் இரவும் பகலும் முருகனின் பாதம் பற்றி கொண்டு முருகனையே எண்ணி வாழ்ந்து வருபவள்..
அப்பெண் பொருளாதர ரீதியாக செல்வம் குறைவற்றவளாக இருந்தாலும் மனது அளவில் அவளை போல் செல்வம் நிறைந்தவர்கள் இல்லை என அத்தனை தூய உள்ளம் கொண்டவள்.அதனால் தான் முருகன் அவள் மனதில் குடி கொண்டு இருக்கின்றான் போல்.
உள்ளம் ஒரு கோயில் என்பதற்கு இவள் ஒரு சாட்சி.தினம் காலை மாலை முருகனை பார்த்து தரிசித்து பாடல் பாடவில்லை என்றால் தூக்கம் வராது அவளுக்கு.
அவளுடைய பக்தி பாடல்கள் அவளின் குரலில் அத்தனை அழகாய் இருக்கும்.சமயங்களில் முருகனின் வாகனம் ஆன மயில் அவள் பாட்டுக்கு நடனம் ஆடும் அந்த காலை பொழுது அந்த சுற்று வட்டாரதத்தில் இருக்கும் அனைவர்க்கும் ஒரு வைகயான புத்துணர்ச்சி தரும்.
இப்படியாக பாடல்கள் பாடி கொண்டு தோட்டங்களில் கிடைக்கும் மல்லிகை பூக்கள் மற்றும் ஸ்வாமிக்கு மாலை பின்னி கொடுத்து வாழக்கையை வாழ்வபவள்.
தாய் இல்லை தந்தை மட்டும் தான்.தந்தை ஒரு விவசாயி.நேரங்களில் தந்தையின் விவசாய வேலைக்கும் உதவி செய்பவள்.இவளின் திருமண வயது வந்த பொழுது முருகன் அருளால் திருமணம் நடக்க இருக்கும் வேளையில .
ஒரு பக்கம் தனக்கு திருமணம் என்ற சந்தோஷத்தில் அவள் திளைத்தலும் மறுபுறம் தான் முருகனை மறந்து திருமணம் செய்து கொள்வதா?முருகன் குடி கொண்ட உள்ளத்தில் வேறு ஒருவ்ருக்கு இடம் கொடுப்பதா?அயோ நினைத்து பார்க்கவே மனம் வரவில்லையே என்று மனம் கதற அசரீரியாக முருகனின் குரல் வசந்தா!!இது உன் ஜென்மத்தின் தீர்க்கவேண்டிய கடன் சற்றும் யோசிக்காமல் சம்மதம் தெரிவித்து உனக்கான வாழ்க்கையை வாழ்.
அந்த வாழ்க்கையில் வரும் இன்பம் துன்பங்களில் நான் நிறைந்து இருக்கின்றேன்.சந்தோஷமா இரு என்று சொல்ல..
முருகனின் கட்டளை இணங்க கண்ணீர் மல்கி முருகா நின் பாதம் மற்றும் பற்ற வேண்டும் என இருந்த எனக்கு உன் கட்டளை மறுக்கமுடியவில்லை என்று திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து திருமணம் நல்ல படியாக முடிந்து திருமண வாழ்க்கையை நல்ல படியாக வாழ்ந்து கொண்டு இருக்க.
சமயங்களில் வசந்தா கணவனிடம் எனக்கு உங்களை காட்டிலும் முருகன் தான் எல்லாமே என்று சொல்ல செல்ல சண்டைகள் எல்லாம் போடுவதுண்டு.
ஆனால் ஒருநாள் அந்த சண்டை முற்றி போக வசந்தா கணவன் தான் வேண்டுமா இல்லை அந்த வேல் கொண்டு பழனியில் வீற்றிருக்கும் அந்த முருகன் வேண்டுமா?நீயே முடிவு செய்து விட்டு சொல் என்று சொல்லி கிளம்பி விடுகிறான்.
வசந்தா அழுது கொண்டே தன் தந்தை வீட்டிற்கு கிளம்ப முருகன் அசரீரியாக வசந்தா!!!நில் கல்லானாலும் கணவன் புல் ஆனாலும் புருஷன்.
என்னைக்கு மூன்று முடிச்சு போட்டு தாலி கட்டி என் முன் வலம் வந்தீர்களோ அன்றே ஏழு ஜென்மம் முடிச்சு விழுந்தாயிற்று.
நீ கோபித்து கொண்டு இப்படி தந்தை வீட்டிற்கு செல்வது நல்லது இல்லை.அங்கு கணவன் சாப்பிடாமல் இருக்கின்றார் சென்று கவனித்து கொள் என்று சொல் வசந்தா ஞான புதல்வனிடம் வாக்கு வாதம் செய்ய தொடங்கி விட்டால்.
முருகா நான் வேண்டாம் என்று புறக்கணித்து செல்லும் என் கணவனை பின் தொடர்நது செல்ல சொல்கிறாய்.வேண்டாம்.உன் மீது நான் வைத்த அன்பை என்று கொச்சை படுத்தினார்களோ அந்த நொடி முடிவு செய்தேன் எனக்கு அந்த கணவன் வேண்டாம் என்று சொல்லி அழுது கொண்டே வேகமாக நடக்க முருகன் வசந்தா நில் !!!
-தொடரும்
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |