கிருத்திகை திதியில் சொல்ல வேண்டிய மந்திரம்
யாருக்கு தான் எதிரிகள் தொல்லை இல்லை.திடீர் என்று நம்பியவர்கள் கூட நம் எதிரியாக மாற வாய்ப்பு உள்ளது,அப்படி மாறி அவர்கள் தொல்லை எல்லை மீறி போகும் பொழுது
"ஓம் ஷத்ரு சம்ஹார சுப்ரமணிய சுவாமியே நமோ நமஹ!"
என்ற மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள்.பயம் மற்றும் எதிரிகளால் வரும் தொல்லைகள் படி படியாக குறையும்.
மேலும் இந்த மந்திரத்தை தொடர்ந்து 6 செவ்வாய்கிழமையில் சொல்லி வழிபட எதிரிகள் தொல்லை முற்றிலும் இல்லாமல் போயிவிடும்.
முடிந்தவர்கள் வீட்டில் இருந்து இந்த மந்திரத்தை சொல்லி இரண்டு செவ்வாழைப்பழம் வைத்து பூஜை செய்து ஒன்றை சாப்பிட்டு மற்றோரு பழத்தை தானமாக கொடுக்கலாம்.
இந்த வழிபாட்டை கிருத்திகை நாளில் கூட வழிபாடு செய்யலாம்.அப்படி கிருத்திகை தொடங்கி வழிபடும் பொழுது 6 கிருத்திகை விரதம் இருந்து இந்த மந்திரம் சொல்லி வர எதிரிகள் இடம் தெரியாமல் போவதுடன் துன்பம் தேய்ந்து போயிவிடும்.
இன்று (05.06.2024)கிருத்திகை திதி இன்று முருகனிடம் பிராத்தனை வைத்தால் முருகன் வேலும் மயிலுடன் ஓடி வந்து காப்பாற்றுவார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |