ஒவ்வொரு நாளும் சொல்லவேண்டிய சக்தி வாய்ந்த முருகர் மந்திரம்

By Sakthi Raj Mar 07, 2025 12:43 PM GMT
Report

கலியுக கடவுளாக முருகப்பெருமான் இருக்கிறார்.அவரை வழிபட நம் வாழ்க்கையில் வெற்றிகள் குவிந்து கொண்டே இருக்கும்.அப்படியாக முருகப்பெருமானின் வழிபாடுகளில் மிகவும் சக்தி வாய்ந்த வழிபாடாக அவருடைய மந்திரங்கள் இருக்கிறது.

அதாவது நம் வாழ்க்கையில் ஏற்படும் இனங்களுக்கு ஏற்றவாறு முருகப்பெருமானின் மந்திரங்கள் இருக்கிறது.ஒருவருக்கு குழந்தை பிறக்க திருப்புகழ்,எதிரிகள் தொல்லை விலக கந்த சஷ்டி கவசம் என்று அதை நாம் சரியாக உச்சரித்து வழிபாடு செய்து வர கட்டாயம் மந்திரங்களின் சக்தியால் முருகனின் அருள் கிடைத்து வாழ்க்கையில் வெற்றிகள் கிடைக்கும்.

அந்த வகையில் வாரத்தின் 7 நாட்களும் நல்ல விதமாக அமைய நாம் சொல்ல வேண்டிய முருகப்பெருமானின் மந்திரங்கள் பற்றி பார்ப்போம்.

ஒவ்வொரு நாளும் சொல்லவேண்டிய சக்தி வாய்ந்த முருகர் மந்திரம் | Murugan Mantras To Chant For 7 Days

முருகன் மந்திரம்:

ஞாயிற்றுக்கிழமை

தாயினும் இனிமையாகத் தண்ணருள் செய்வாய் போற்றி!
சேயென ஆள்வாய் ஞானத் திருமுருகேச போற்றி!
மீயுயள் பரங்குன்றில் மேவிய வேலா போற்றி!
ஞாயிறு வாரம் வந்து நலமெலாம் அருள்வாய் போற்றி!

திங்கட்கிழமை:

துங்கத்தமிழால் உனைத் தொழுவோர்க்கு அருள் வேலவ போற்றி!
சிங்க முகனை வதைத்த அருட்செல்வத் திருநாயக போற்றி!
சங்கப்புலவோர் தமக்கென்றும் தலைவா சிவதேசிக போற்றி!
திங்கட்கிழமை வந்தருள்வாய் செந்தில்பதி நின்பதன் போற்றி!

செவ்வாய்க்கிழமை:

செவ்வான் அனைய திருமேனிச் சேயே நாயேன் துயர் தீராய்
எவ்வானவரும் ஏத்துகின்ற இறைவா இளம் பூரண போற்றி!
தெய்வாதனை இல்லாத பரயோகியர் சிவதேசிக போற்றி!
செவ்வாய்க்கிழமை வந்தருள்வாய் செல்வப் பழநி குகா போற்றி!

போகர் சித்தர் மீண்டும் மறுபிறவி எடுப்பாரா?

போகர் சித்தர் மீண்டும் மறுபிறவி எடுப்பாரா?

புதன்கிழமை:

மதவாரணமுகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகப்
பதவாழ்வு அருள்வாய் பரனே அரனார் பாலகனே
உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே
புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி!

வியாழக்கிழமை:

மயானம் உறையும் இறையான மகேசன் பெற்ற குகேசன் எனத்
தியானப் பொருளாம் திருமுருகா தேவே மாவேதிய போற்றி!
தயாளசீலா தணிகை முதல் தவர்வாழ் குன்றுதொறும் வாழ்வாய்
வியாழக்கிழமை வந்தருள்வாய் வேலா கோலாகலா போற்றி!

வெள்ளிக்கிழமை:

அள்ளி வழங்கும் ஆறுமுகுத்தரசே விரைசேர் கடம்பணிந்த
வள்ளிக் கணவா வடிவேலா வரதச் சரதப் பெருவாழ்வே!
வெள்ளிமலைதேர் வியன் ஞானம் மேவு பழமார் சோலையனே
வெள்ளிக்கிழமை வந்தருள்வாய் வேத நாத பதம் போற்றி!

சனிக்கிழமை:

கனிவாய் வள்ளி தெய்வானைக் கணவா உணர்வோர் கதிர்வேலா
முனிவாய் எனில் நான் எங்கடைவேன் முத்தா அருணை முனிக்கு அரசே
இனிவாதனையால் அடிநாயேன் என்றும் குன்றா வணம் வாழ்
சனிவாரமதில் வந்தருள்வாய் தயவார் வயலூர்ப்பதி போற்றி!
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US