விரைவில் வீட்டில் கெட்டி மேளம் முழங்க நாம் செய்ய வேண்டியவை
முருகன் என்றாலே மனம் உருகிவிடும். அப்பன் முருகனிடம் வேண்டிய காரியம் எதுவும் நடந்திடாமல் போனதாக ஐதீகம் இல்லை.
பலரும் முருக பெருமானிடம் தன் வாழ்க்கையின் பல குறைகளை சொல்லி வேண்டுதலை வைக்கின்றனர்.
அந்த வரிசையில் குழந்தை இல்லாதவர்கள், திருமண தடை உள்ளவர்கள் முருகனை மனதார நினைத்து வழிபட அதை முருகன் அருளிச்செய்வான் என்பது பலரது அதீத நம்பிக்கையாக இருக்கிறது.
திருமணம் தள்ளிக்கொண்டே போதல்
திருமண வயதில் இருக்கும் பலருக்கு ஜாதகத்தில் ஏற்படும் தோஷங்களால் திருமணம் தள்ளி கொண்டே போகும்.
இவர்கள் முருகப்பெருமான் மீது அருணகிரிநாதர் பாடிய கீழ்கண்டன திருப்புகழ் பாடலை தொடர்ந்து 48 நாள் காலை அல்லது மாலையில் 6 முறை பாடி வர முருகன் அருளால் விரைவில் வீட்டில் கெட்டி மேளச்சத்தம் கேட்கும் என்கின்றனர்.
இதோ அந்த பாடல்
விறல்மாரன் ஐந்து மலர்வாளி சிந்த
மிகவானில் இந்துவெயில்காய
மிதவாடை வந்து தழல் போல ஒன்ற
விலைமாதர் தம்தம் வசைகூற
குறவாணர் குன்றில் உறைபேதை கொண்ட
கொடிது ஆன துன்ப மயல் தீர
குளிர்மலையின் கண் அணிமாலை தந்து
குறை தீர வந்து குறுகாயோ?
மறிமான் உகந்த இறையோன் மகிழ்ந்து
வழிபாடு தந்த மதியாளா
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
வடிவேலெறிந்த அதிதீரா
அறிவால் அறிந்து உன் இருதாள் இறைஞ்சும்
அடியார் இடைஞ்சல் களைவோனே
அழகான செம்பொன் மயில்மேல் அமர்ந்து
அலைவாய் உகந்த பெருமாளே.