நாம் தினமும் சொல்லவேண்டிய முருகன் மந்திரங்கள்

By Sakthi Raj Jul 07, 2024 11:00 AM GMT
Report

ஞாயிற்றுக்கிழமை

தாயினும் இனிமையாகத் தண்ணருள் செய்வாய் போற்றி!

சேயென ஆள்வாய் ஞானத் திருமுருகேச போற்றி!

மீயுயள் பரங்குன்றில் மேவிய வேலா போற்றி!

ஞாயிறு வாரம் வந்து நலமெலாம் அருள்வாய் போற்றி!

நாம் தினமும் சொல்லவேண்டிய முருகன் மந்திரங்கள் | Murugan Mathirangal Mantra Slogam Temple

திங்கட்கிழமை

துங்கத்தமிழால் உனைத் தொழுவோர்க்கு அருள் வேலவ போற்றி!

சிங்க முகனை வதைத்த அருட்செல்வத் திருநாயக போற்றி!

சங்கப்புலவோர் தமக்கென்றும் தலைவா சிவதேசிக போற்றி!

திங்கட்கிழமை வந்தருள்வாய் செந்தில்பதி நின்பதன் போற்றி!

18 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் ராஜ யோகம்:கோடீஸ்வரன் ஆக போகும் ராசிகள் யார் தெரியுமா?

18 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் ராஜ யோகம்:கோடீஸ்வரன் ஆக போகும் ராசிகள் யார் தெரியுமா?


செவ்வாய்க்கிழமை

செவ்வான் அனைய திருமேனிச் சேயே நாயேன் துயர் தீராய்

எவ்வானவரும் ஏத்துகின்ற இறைவா இளம் பூரண போற்றி!

தெய்வாதனை இல்லாத பரயோகியர் சிவதேசிக போற்றி!

செவ்வாய்க்கிழமை வந்தருள்வாய் செல்வப் பழநிகுக போற்றி!

புதன்கிழமை

மதவாரணமுகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகப்

பதவாழ்வு அருள்வாய் பரனே அரனார் பாலகனே

உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே

புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி!

நாம் தினமும் சொல்லவேண்டிய முருகன் மந்திரங்கள் | Murugan Mathirangal Mantra Slogam Temple

வியாழக்கிழமை

மயானம் உறையும் இறையான மகேசன் பெற்ற குகேசன் எனத்

தியானப் பொருளாம் திருமுருகா தேவே மாவேதிய போற்றி!

தயாளசீலா தணிகை முதல் தவர்வாழ் குன்றுதொறும் வாழ்வாய்

வியாழக்கிழமை வந்தருள்வாய் வேலா கோலாகலா போற்றி!

வெள்ளிக்கிழமை

அள்ளி வழங்கும் ஆறுமுகுத்தரசே விரைசேர் கடம்பணிந்த,

வள்ளிக் கணவா வடிவேலா வரதச் சரதப் பெருவாழ்வே!

வெள்ளிமலைதேர் வியன் ஞானம் மேவு பழமார் சோலையனே,

வெள்ளிக்கிழமை வந்தருள்வாய் வேத நாத பதம் போற்றி!

சனிக்கிழமை

கனிவாய் வள்ளி தெய்வானைக் கணவா உணர்வோர் கதிர்வேலா,

முனிவாய் எனில் நான் எங்கடைவேன் முத்தா அருணை முனிக்கு அரசே,

இனிவாதனையால் அடிநாயேன் என்றும் குன்றா வணம் வாழ்,

சனிவாரமதில் வந்தருள்வாய் தயவார் வயலூர்ப்பதி போற்றி!

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US