பொதுவாக குழந்தை வரம் வேண்டுபவர்களே சஷ்டி விரதம் இருப்பார்கள் என்று சொல்வார்கள். ஆனால் எந்த பிரச்சனையாக இருந்தாலும் சஷ்டி விரதம், வழிபட்டால் முருகப் பெருமான் அவர்களின் கஷ்டத்தை தீர்த்து வைப்பார் என்பது பலரும் அனுபவ ரீதியாக கண்ட உண்மை.
முருகப் பெருமானுக்குரிய சிறப்பான விரதங்களில் ஒன்று சஷ்டி விரதம். ஐப்பசி மாதத்தில் வரும் கந்த சஷ்டி விழாவின் போதே லட்சக்கணக்கானர்கள் விரதம் இருந்து, முருகனை வழிபடுவார்கள்.
ஆனால் கந்தசஷ்டி காலத்தில் மட்டுமின்றி மாதந்தோறும் வரும் சஷ்டி திதிகளிலும் முருகனுக்கு விரதம் இருந்து வழிபடலாம். வளர்பிறை திதியில் ஒன்று , தேய்பிறை திதியில் ஒன்று என மாதத்திற்கு இரண்டு முறை சஷ்டி வருவதுண்டு.
பொதுவாக குழந்தை வரம் வேண்டுபவர்களே சஷ்டி விரதம் இருப்பார்கள் என்று சொல்வார்கள்.
ஆனால் எந்த பிரச்சனையாக இருந்தாலும் சஷ்டி விரதம், வழிபட்டால் முருகப் பெருமான் அவர்களின் கஷ்டத்தை தீர்த்து வைப்பார் என்பது பலரும் அனுபவ ரீதியாக கண்ட உண்மை.
மாதந்தோறும் வரும் சஷ்டி விரதத்தை யாரெல்லாம் இருக்கலாம், விரதம் இருக்கும் முறை என்ன, என்ன பாடல் பாராயணம் செய்து முருகப் பெருமானை வழிபட வேண்டும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
விரதம் எப்போது துவங்க வேண்டும் ?
பிரச்சனைகள் தேய வேண்டும் என்பவர்கள் தேய்பிறை சஷ்டியிலும், நல்ல விஷயம் துவங்குகிறோம் அது வளர வேண்டும் என்பவர்கள் வளர்பிறையிலும் சஷ்டி விரதம் இருக்க துவங்கலாம் என்பார்கள்.
ஆனால் எந்த காரணத்திற்காக சஷ்டி விரதம் இருந்தாலும் வளர்பிறை, தேய்பிறை என எந்த திதியில் வேண்டுமானாலும் சஷ்டி விரதம் இருக்கலாம்.
விரதம் இருக்கும் முறை
சஷ்டி விரதம் இருப்பவர்கள் காலையில் எழுந்த உடன் குளித்து விட்டு, விளக்கேற்றி, வீட்டில் உள்ள முருகனின் திருவுருவப் படத்திற்கு செவ்வந்திப் பூ அல்லது ஏதோ ஒரு வெள்ளை நிறப் பூ அணிவிக்க வேண்டும்.
நைவேத்தியமாக காய்ச்சிய பாலுடன் சர்க்கரை அல்லது தேன் கலந்து வைக்கலாம். அதோடு இரண்டு வாழைப்பழங்கள் அல்லது என்ன பழம் கிடைக்கிறது ஏதாவது ஒரு பழம், வெற்றிலை பாக்கு வைத்து, மனமுருகி நமது பிரார்த்தனையை முருகப் பெருமானிடம் முறையிட்டு, வேண்டிக் கொண்ட விரதத்தை துவக்க வேண்டும்.
அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று வணங்க வேண்டும்.
ஒரு வேளை சாப்பிடாமலோ அல்லது இரண்டு வேளையும் சாப்பிடாமலோ அல்லது பழம் மற்றும் பால் மட்டும் சாப்பிட்டுக் கொண்டோ விரதம் இருக்கலாம். உடல்நிலையை பொருத்து எந்த முறையில் வேண்டுமானாலும் விரதம் இருக்கலாம்.
நைவேத்தியமாக காய்ச்சிய பால், பழம் வைத்து வழிபட வேண்டும். பூஜைகளை முடித்த பிறகு நைவேத்தியமாக வைத்துள்ள பாலை குடித்து விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.
எத்தனை காலம் விரதம் இருக்கலாம்? எந்த காரணத்திற்காக விரதம் இருக்கிறீர்களோ அந்த காரியம் நிறைவேறும் வரை ஒவ்வொரு மாதத்திலும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை சஷ்டிகளில் விரதம் இருக்கலாம்.
குழந்தை வரம் வேண்டுபவர்கள் குழந்தை பிறக்கும் வரை இந்த விரதத்தை தொடர்ந்து இருக்கலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |