வேண்டுதல் நிறைவேற வேல் வழிபாடு
ஒவ்வொரு தெய்வங்களும் ஒவ்வொரு பொருள் உகந்த பொருளாக இருக்கும்.உதாரணமாக அம்மனுக்கு சூலம்,குலதெய்வங்கள் எடுத்து அவர்கள் கையில் அரிவாள் போன்றவை இருக்கும்.
அந்த பொருட்களை வீட்டில் வைத்து வழிபடலாம் . அதில் கலியுக வரதனாக போற்ற படும் முருகப்பெருமானுக்கு வேலும் மயிலும் தான் எல்லாமே.முருகன் கையில் இருக்கும்
வேலாயுதம் அத்தனை சக்திகள் நிறைந்து அதை வீட்டில் வைத்து வழிபாடும் பொழுது வீட்டில் பல விதமான நன்மைகள் ஏற்படுகிறது.அதை பற்றி பார்ப்போம்.
சூரபத்மனை வதம் செய்ய சக்தி தேவியால் முருகருக்கு கொடுக்க பட்ட கவசம் தான் வேல். வேல் என்பது சக்தியின் ரூபமாகவே திகழக்கூடியது.
அப்படிப்பட்ட வேலை நம்முடைய வீட்டில் வைத்து நாம் வழிபடுவதன் மூலம் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தையும் நீக்குகிறது.
அதோடு மட்டுமல்லாமல் என்ன வேண்டுதல் நாம் வைக்கிறோமோ அந்த வேண்டுதல் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது. வெள்ளி அல்லது பித்தளையால் செய்யப்பட்ட வேலை வாங்கிக் வைத்து வழிபட வேண்டும்.
இந்த வழிபாட்டை முருகப்பெருமானுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை, கிருத்திகை, சஷ்டி அல்லது வரப்போகும் வைகாசி விசாகம் போன்ற தினங்களில் ஆரம்பிக்கலாம்.
48 நாட்கள் என்று கணக்கு வைத்தும் இந்த வழிபாட்டை நாம் செய்யலாம். அல்லது நிரந்தரமாக நம்முடைய பூஜை அறையில் வைத்தும் வழிபடலாம்.
முதலில் வேலை சுத்தம் செய்து கொள்ளுங்கள். பிறகு ஒரு கலசத்தை எடுத்து அதில் பச்சரிசியை நிரப்பி அதற்குள் இந்த வேலை வைக்க வேண்டும்.
இப்பொழுது வேலிற்கு அபிஷேகம் செய்ய வேண்டும். அபிஷேகம் செய்வதற்கு பல பொருட்களை தேட வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.
சுத்தமான தண்ணீரை மட்டும் வைத்துக் கூட நாம் தினமும் வேலுக்கு அபிஷேகம் செய்யலாம்.
சுத்தமான தண்ணீரை ஊற்றி அபிஷேகம் செய்த பிறகு பச்சரிசியை எடுத்து எறும்புகள் இருக்கும் இடத்தில் போட்டு விடுங்கள்.
மறுபடியும் புதிதாக பச்சரிசியை நிரப்பி அதில் வேலை வைத்து வேலுக்கு சந்தனம் குங்குமம் வைத்து செவ்வரளி பூக்களை சூட்ட வேண்டும்.
வேலின் நுனியில் கெட்டியாக சந்தனத்தைக் குழைத்து கூர்மை தெரியாத அளவு வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக வேல்மாறல் அல்லது 108 வேல் போற்றி இவற்றை மனதார கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.
அர்ச்சனை முடித்த பிறகு உங்களுடைய வேண்டுதல் என்னவோ அந்த வேண்டுதலை மனதார முருகப்பெருமானிடம் கூற வேண்டும்.
கடைசியாக கற்பூர தீப தூப ஆராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து விட வேண்டும். தினமும் அபிஷேகம் செய்ய இயலாது என்று நினைப்பவர்கள் செவ்வாய்க்கிழமையில் மட்டுமாவது அபிஷேகம் செய்து விட்டு, மற்ற நாட்களில் வேலிற்கு அர்ச்சனை மட்டும் செய்து கொள்ளலாம்.
அதாவது 108 போற்றிகளை மட்டும் கூறி அர்ச்சனை செய்து கொள்ளலாம். 48 நாட்கள் ஒரு குறிப்பிட்ட வேண்டுதலை நினைத்து வேல் வழிபாடு செய்வதாக இருந்தால் 48 நாட்கள் நிறைவடைந்த பிறகு அந்த வேலை அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்தில் இருக்கும் கோவில் உண்டியலில் போட்டு விட வேண்டும்.
வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் முருகப்பெருமான் மீது நம்பிக்கை வைத்து முருகப்பெருமானின் வேலை வீட்டில் வைத்து வழிபட்டால் வேலவன் நிச்சயமாக அருள் புரிவர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |