முருகனுக்கு எந்த பொருள் கொண்டு அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்
தமிழ் கடவுளான முருகப் பெருமானுக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று அபிஷேகம். பல தெய்வங்களை வழிபட்ட பலனை தரும் அற்புத தெய்வமான முருகப் பெருமானை சில குறிப்பிட்ட பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்வது மிகவும் விசேஷமானதாகும்.
அதுவும் முருகனுக்குரிய சஷ்டி திதி வளர்பிறை, தேய்பிறை சஷ்டி இரண்டிலும், கிருத்திகை நட்சத்திரம், விசாகம் நட்சத்திரம் வரும் நாட்களில் இந்த அபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பாகும்.
முருகனுக்கு மட்டுமின்றி வேல், வள்ளி, தெய்வானைக்கும் அபிஷேகம் செய்வத இதே பலன் கிடைக்கும். எந்தெந்த பிரச்சனைகள் தீருவதற்கு முருகனுக்கு எந்த பொருளால் அபிஷேகம் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
முருகனுக்குரிய அபிஷேக பொருட்களும், அவற்றின் பலன்களும் :
திருமஞ்சனம் - தோல் நோய்கள் நீங்கும்.
பஞ்சாமிர்தம் - நோய்கள் விலகி, ஆரோக்கியம் பெருகும். பஞ்சாமிர்தத்தை பிரசாதமாக படைத்தால் செல்வம் பெருகும்.
பால் - குடும்ப விருத்தி, குல விருத்தி ஏற்படும். சகல செளபாக்கியங்களும் உண்டாகும்.
தயிர் - குழந்தை பாக்கியம் கிடைக்கும். * எலுமிச்சை - எம பயம் நீங்கும்
இளநீர் - மனதில் அமைதி, குடும்பத்தில் நிம்மதியை தரும்.
பழ வகைகள் - பிரபலமடைய செய்யும்.
கரும்புச்சாறு - உடல் நோய்களை நீக்கும்.
சந்தனம் - பெயர், புகழ், அந்தஸ்து கிடைக்கும்.
பன்னீர் - தொழில், வாழ்க்கையில் வளர்ச்சியை தரும்.
விபூதி - சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
மஞ்சள் - தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும்.
குங்குமம் - குல விருத்தி, குடும்பத்தில் சந்தோஷம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |