இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (18.05.2024)

Report

மேஷம்

யோகமான நாள். நீண்டநாள் முயற்சி இன்று வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வந்துசேரும். நன்மையான நாள். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் உண்டான பிரச்னைகள் விலகும்.மனதில் குழப்பம் அதிகரிக்கும். உடல்நிலையில் எதிர்பாராத சங்கடம் தோன்றும்.

ரிஷபம்

செயல்களில் கவனம் செலுத்துவது அவசியம். வேலைபளுவின் காரணமாக மனம் சோர்வடையும். வருவாயில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். வியாபாரத்தில் தோன்றிய பிரச்னைகளை சரிசெய்வீர்கள்.தடைகளைத்தாண்டி வெற்றியடையும் நாள். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும்.

மிதுனம்

அரசுவழி முயற்சிகளில் தடைகளை சந்திப்பீர்கள். உடன் பணிபுரிபவர்களால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.தொழிலில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். கவனம் தேவை.

கடகம்

எதிர்பாராத நெருக்கடிகள் தோன்றும். உதவி புரிவதாக சொன்னவர்கள் காணாமல் போவார்கள்.குடும்பத்தினர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வீர்கள். வரவை வைத்து கடன்களை அடைப்பீர்கள். நம்பிக்கையுடன் எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். நண்பர்கள் உதவியால் உங்கள் முயற்சி நிறைவேறும்.

சிம்மம்

தடைபட்டிருந்த உங்கள் முயற்சி வெற்றியாகும். திட்டமிட்டு செயல்பட்டு நினைப்பதை சாதிப்பீர்கள்.பணியிடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.வியாபாரிகளுக்கு வருமானம் அதிகரிக்கும். ஆதாயமான நாள்.மனதில் குழப்பம் அதிகரிக்கும். உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம்.

கன்னி

விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சிகள் இன்று இழுபறியாகும். உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள்.முயற்சியில் சில நெருக்கடிகளை சந்திப்பீர்கள். எதிர்பாராத சங்கடங்களால் குழப்பம் அதிகரிக்கும்.

வெள்ளிக்கிழமை நாம் மறந்தும் செய்யக்கூடாதவை

வெள்ளிக்கிழமை நாம் மறந்தும் செய்யக்கூடாதவை


துலாம்

உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். புதிய முயற்சிகளைத் தள்ளி வைப்பது அவசியம்.புதிய வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி இன்று தேடி வரும். விரய சந்திரனால் செயல்களில் சிரமங்கள் உண்டாகும். அலைச்சல் அதிகரிக்கும்.

விருச்சிகம்

உங்களது அவசரச் செயல்கள் இன்று எதிர்மறையான பலன்களை உண்டாக்கும். கவனம் தேவை. தொழிலில் இருந்த சங்கடம் நீங்கும். பணியாளர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். செலவு அதிகரிக்கும். செயல்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் மனம் சோர்வடைவீர்கள்.

தனுசு

திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். வெளி வட்டாரத்தில் உங்கள் மதிப்பு உயரும். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். வருமானத்திற்காக மேற்கொள்ளும் முயற்சியில் சில தடைகளை சந்திப்பீர்கள்.

மகரம்

வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த ஆதாயம் காணமுடியாமல் போகும்.நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். உங்கள் விருப்பத்திற்கு மாறானவற்றை இன்று நீங்கள் சந்திக்க வேண்டிவரும்.

கும்பம்

மனதில் இனம்புரியாத குழப்பம் உண்டாகும். செயல்களில் தடைகளும் தாமதமும் ஏற்படும். போராடி வெற்றிபெறும் நாள். உழைப்பு அதிகரிக்கும் என்றாலும் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். திட்டமிட்டு செயல்பட்டாலும் முயற்சி நிறைவேறாமல் போகும். வரவு செலவில் கவனம் தேவை.

மீனம்

கடுமையாக உழைத்தாலும் செயலில் நீங்கள் எதிர்பார்த்த அனுகூலத்தை அடைய முடியாமல் போகும். மகிழ்ச்சியான நாள். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். உடல்நிலை சீராகும். எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாகும் நாள். ஆசைகளுக்கு இடம் கொடுக்காதீர்கள்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US