நோய் தீர்க்கும் அற்புதமான முருகப்பெருமானின் திருப்புகழ்
கலியுக வரதன் முருகப்பெருமான் அவன் பக்தர்கள் துயர் தீர்க்கும் அற்புத சக்தி படைத்தவர். இவரிடம் சென்று முறையிட வந்த பிரச்சனைகள் எல்லாம் திசை தெரியாமல் சென்று விடும். ஆனால், இவரை வழிபாடு செய்யும் பொழுது நாம் முழுமனத்தோடும் நம்பிக்கையோடும் வழிபாடு செய்யவேண்டும்.
அவ்வாறு செய்யும் பொழுது நம் வேண்டுதல்களுக்கும் பக்திக்கும் நல்ல பதில் கிடைக்கும். மேலும், முருகப்பெருமான் வழிபாட்டில் மிகவும் சக்தி வாய்ந்ததாக அவரின் திருப்புகழ் இருக்கிறது. மனிதர்கள் சந்திக்கும் இன்னல்களுக்கு ஏற்ப முருகப்பெருமானின் திருப்புகழை எடுத்து பாராயணம் செய்து வர நமக்கு நல்ல விடைக்கிடைக்கும்.
அப்படியாக, திடீர் என்று நம்மை வாட்டி வதைக்கும் நோயால் அவதிப் படும் பொழுது நாம் சொல்ல வேண்டிய முருகப்பெருமானின் திருப்புகழ் பற்றி பார்ப்போம்.
இருமலு ரோக முயலகன் வாத
மெரிகுண நாசிவிடமேநீ
ரிழிவுவி டாத தலைவலி சோகை
யெழுகள மாலை யிவையோடே
பெருவயி றீளை யெரிகுலை சூலை
பெருவலி வேறு முளநோய்கள்
பிறவிகள் தோறு மெனைநலி யாத
படியுன தாள்கள் அருள்வாயே
வருமொரு கோடி யசுரர்ப தாதி
மடியஅ நேக இசைபாடி
வருமொரு கால வயிரவ ராட
வடிசுடர் வேலை விடுவோனே
தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி
தருதிரு மாதின் மணவாளா
சலமிடை பூவி னடுவினில் வீறு
தணிமலை மேவு பெருமாளே.
இந்த திருப்புகழை எவர் ஒருவர் இருமல், ரோகம், முயலகன் என்னும் வலிப்பு நோய், வாதம், எரிக்கும் தன்மையுடைய நாசி , நீரிழிவு , விடாத தலைவலி, இரத்த சோகை, எழுகளமாலை என்னும் கழுத்தைச் சுற்றி உண்டாகும் புண்கள், நெஞ்சு எரிச்சல், சூலை நோய் என்னும் கொடிய வயிற்றுவலி, பலவிதக் காரணங்களால் உடம்பில் உண்டாகும் வலிகள், மற்றும் பல்வேறு நோய்களால் அவதிப்படும் பொழுது அவர்கள் முருகப்பெருமானின் இந்த திருப்புகழை பாராயணம் செய்து வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |