இந்த ஒரு பரிகாரம் போதும்.., நகைக்கடனை விரைவில் அடைக்கலாம்

By Yashini Aug 16, 2024 02:41 PM GMT
Report

பொதுவாக பெண்களுக்கு சந்தோஷம் என்பது தாங்கள் அணிந்திருக்கும் நகைகளை பொறுத்துக் கூட உண்டு.

அதற்காக அவர்கள் சிறுக சிறுக பணத்தை சேர்த்து வைத்து நகைகளை வாங்கி அணிந்து கொள்ளும் பெண்கள் பலர் இருக்கிறார்கள்.

அப்படி இருந்தும் திடீரென்று ஏற்படும் அவசரமான சூழ்நிலையில் சேர்த்து வைத்திருந்த நகையை அடகு வைக்கவும் செய்வார்கள்.

இந்த ஒரு பரிகாரம் போதும்.., நகைக்கடனை விரைவில் அடைக்கலாம் | Nagai Kadan Theera Parigaram

இப்படி அடகில் வைத்த நகைகளை திருப்ப முடியாமல் சிரமப்படுபவர்களும் பாலர் இருக்கின்றனர்.

அந்தவகையில், நகை கடனை அடைக்க வரலட்சுமி விரதத்தன்று செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரம் பற்றி பார்ப்போம்.

செய்யவேண்டிய பரிகாரம்

வீட்டில் நம்மிடம் இருக்கக்கூடிய தொகையை மகாலட்சுமி தாயாரின் முன்பாக வைத்து வழிபாடு செய்து கொள்ளுங்கள்.

பிறகு அந்த தொகையை எடுத்துக்கொண்டு அருகில் இருக்கக்கூடிய நகைக்கடைக்கு சென்று தங்களால் இயன்ற ஒரு குண்டுமணி அளவாவது தங்கத்தை அன்றைய தினம் வாங்க வேண்டும்.

வாங்கி வந்த தங்கத்தை மறுபடியும் பூஜை அறையில் வைத்து அதில் புனுகை தடவவும்.

இந்த ஒரு பரிகாரம் போதும்.., நகைக்கடனை விரைவில் அடைக்கலாம் | Nagai Kadan Theera Parigaram

பின் எங்களிடம் தங்கம் வளர்ந்து கொண்டே இருக்கிறது, எங்களிடம் தங்கம் நிலையாக இருந்து கொண்டே இருக்கிறது, எங்களிடம் தங்கம் நிறைவாக இருந்து கொண்டே இருக்கிறது என்று சொல்லி வழிபாடு செய்ய வேண்டும்.

இப்படி ஆடி மாதத்தின் கடைசி வெள்ளியான வரலட்சுமி விரதத்தன்று தங்கத்தை வாங்கி வைத்து மனதார இந்த வார்த்தைகளை கூறும் பொழுது நகையில் இருக்கக்கூடிய தோஷம் படிப்படியாக விலகி விரைவிலேயே அடமானத்தில் இருக்கக்கூடிய நகைகள் வீடு வந்து சேரும்.        

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.  


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US