கலியுக முடிவில் உயிர்த்தெழும் நந்தி: எங்குள்ளது தெரியுமா?
ஆந்திர பிரதேசம், நந்தியால் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலான ஸ்ரீ யாகந்தி உமா மகேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.
இக்கோயிலை 15ம் நூற்றாண்டில் ராஜா ஹரிஹரபுக்கா கட்டியுள்ளார்.
இக்கோயிலின் திருக்குளத்தில் உள்ள நந்தியின் வாயிலிருந்து வரும் நீர் தூய்மையாகவும், இனிப்பாகவும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தீர்த்தக் குளத்தில் குளிப்பது நல்ல பலன்களைக் கொடுக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.
இத்திருத்தலத்தில் உள்ள நந்தி வளர்ந்துகொண்டே போவதாக பக்தர்கள் கூறுகிறார்கள். இங்குள்ள நந்தி இப்போது இருக்கும் அளவை விட சிறியதாகவே இருந்திருக்கிறது.
இக்கோயில் நந்தி வளர்ந்துகொண்டேபோவதால், கோயில் நிர்வாகம் ஒரு தூணையே எடுத்து விட்டதாகக் கூறப்படுகிறது.
வீரபிரம்மேந்திர சுவாமிகளின் கூற்றின்படி, இந்த நந்தி கலியுக முடிவில் உயிர்பெற்று எழும் என்று கூறியிருக்கிறார்.
அகத்திய முனிவர் தவத்தின்பொழுது காகம் ஒன்று தொந்தரவு செய்ததால் இங்கே காகம் வரக்கூடாது என்று சபித்து விட்டதால் இக்கோயிலைச் சுற்றி காகத்தை காண முடியாது என்று பக்தர்கள் கூறுகிறார்கள்.
காகம் சனி பகவானின் வாகனம், ஆதலால் இக்கோயிலில் சனி பகவானாலும் நுழைய முடியாது என்பது ஐதீகம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |