உக்கிரமான தெய்வங்களை வழிபாடு செய்யலாமா?
பொதுவாக உக்கிரமான தெய்வங்களை வழிபாடு செய்வது என்பது அனைவராலும் முடிவது இல்லை. காரணம் பயம்.இன்னும் சிலர் அந்த தெய்வங்களின் படங்களை பார்க்கவே பயப்படுவார்கள்.ஆனால் உண்மையில் உக்கிரமான தெய்வங்களை வழிபாடு செய்ய நம்முடைய வாழ்க்கையில் நடக்கும் அதீத மாற்றத்தை பற்றி பார்ப்போம்.
உலகில் தொடக்கம் என்றால் அதற்கு கட்டாயம் முடிவு என்ற உண்டு.அதே போல எந்த பிரச்சனை என்றாலும் அதற்கு நிச்சயம் ஒரு தீர்வும் உண்டு.உக்ரதெய்வங்கள் பல இருந்தாலும் ஒருவரின் பிரச்சனைக்கு தீர்வு தரும் தெய்வங்கள் அவரவர் ஜாதகம் பார்த்தே நாம் தெரிந்து கொண்டு வழிபாடு செய்யலாம்.
உதாரணத்திற்கு புதன் செவ்வாய் கிரகங்கள் பிரச்சனைக்கு தீர்வை தரும் என்றால் நரசிம்மர் அவருக்கு வழிகாட்டுவார். அதாவது ஒருவருக்கு நரசிம்மர் உதவுவார் என்று ஜாதக அமைப்பில் இருந்தால் மற்ற உக்கிர தெய்வத்தை காட்டிலும் அவர்கள் நரசிம்மரை பற்றி கொள்வது அவர்களுக்கு நல்ல மாற்றத்தை தரும்.
அவ்வாறு ஒவ்வொருவர் ஜாதகம் பார்த்து அவர்களுக்கு ஏற்ற உக்கிரமான தெய்வங்களை வழிபாடு கட்டாயம் நல்ல திருப்புமுனை அமையும்.
மேலும் மனிதனுக்கு எதிரிகள் தொல்லை என்பது பெரும் அவசத்தையாக இருக்கும்.அது அவர்களின் நிம்மதியை கெடுத்து விடும்.அப்படியாக ஒருவருக்கு எதிரிகள் இல்லாமல் அமானுஷிய பாதிப்பு வராது. எதிரிகளை நிலை குலைய வைக்க நாம் வழிபட வேண்டிய உக்கிரமான தெய்வங்கள் வாராஹி அம்மன் காளியம்மன்(வக்ரகாளி/மடப்புறகாளி)நரசிம்மர்,சரபேஸ்வரர்,பிரிந்தியங்கராதேவி,துர்கையம்மன் ஆவார்கள்.
இதை உக்கிரமான கோபத்தை உடைய தெய்வங்களை இடைவிடாது நாம் பற்றி கொண்டு வழிபாடு செய்து வர பிரச்சனை தீர்ந்து மன அமைதி கிடைக்கும். அது மட்டும் அல்லாமல் இந்த தெய்வங்களின் வரலாற்றை ஆய்வு செய்தோம் என்றால் ஏதேனும் எதிரியை அழிக்க அவதாரம் எடுத்ததாக இருக்கும்.
ஆக வீண் வம்பு செய்து நம்முடைய நற்பெயரை கலங்க படுத்த பொறாமை குணம் கொண்டவர்களால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு மனம் கலங்காமல் இந்த தெய்வங்களின் காலடிகளை பற்றி கொள்ள நிம்மதியான சூழல் உருவாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |