கர்ம வினைகளை குறைக்கும் இரட்டை பிள்ளையார் கிரிவலம்
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்.கஷ்டம் நஷ்டம் என்று வந்து கொண்டு இருக்கும்.அதாவது ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு கஷ்டங்கள் ஏற்படும்.அந்த வயதிற்கு ஏற்ப தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும் என்றாலும் பலராலும் வாழ்க்கை கொடுக்கும் வலியை,கஷ்டத்தை கடந்து செல்ல முடிவதில்லை.
கணவன் மனைவி சண்டையில் தொடங்கி அண்ணன் தம்பி, உற்றார் உறவினர்கள் மற்றும் சமுதாயம் என்று பல இடர்பாடுகளை மனிதன் சந்திக்க வேண்டியுள்ளது.இதற்க்கு எல்லாம் ஒரே ஒரு தீர்வு இறைவனை சரண் அடைதல்.
சமயங்களில் நம்முடைய கர்ம வினைகள் கூட இந்த மாதிரியான கஷ்ட காலத்தை கொடுத்து விடும்.ஆக வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டத்தை போக்க கூடிய இரட்டை பிள்ளையார் கிரிவலத்தை பற்றி பார்ப்போம்.இந்த கிரிவலத்தின் முக்கியத்துவம் பற்றி அகத்திய முனிவரும் சொல்லி இருப்பது குறிப்பிடத்தக்கது.
சிவபக்தர்களுக்கு கொண்டாடும் இடமாக திருவண்ணாமலை அமைய பெற்று இருக்கிறது.அங்கு உள்ளே ஆனைத் திறை கொண்ட கணபதி சன்னதி உள்ளது.நம்முடைய கிரிவலத்தை அங்கு இருந்து புறப்பட வேண்டும். புறப்பட்டு கிழக்கு கோபுர வாசலில் உள்ள தேரடி முனீஸ்வரரை பிரார்த்தனை செய்து விட்டு கிரிவலம் செல்ல ஆரம்பிக்க வேண்டும்.
அருணாச்சல சிவ என்ற மந்திரத்தை அல்லது நற்பவி அண்ணாமலை என்ற மந்திரத்தை உச்சரித்து கொண்டு கிரிவலம் செல்ல வேண்டும் .வெறும் காலில் நடந்து கிரிவலம் செல்ல வேண்டும் .
காலில் நோய் உள்ளவர்கள் மட்டும் சாக்ஸ் அணிந்து கொண்டு கிரிவலம் செல்லலாம்.கிரிவலம் செல்வது என்பது நம்முடைய மனதை ஆன்மாவை சுத்தமாக தூய்மையாக செய்ய கூடிய ஒன்றாகும்.
பொதுவாக மனம் பாரமாக இருந்தால் மனம் ஓய்வு பெரும் வரையில் நடைபயணம் மேற்கொண்டால் மன பாரம் சற்று குறைவது போல் இருக்கும்.அதே நடைப்பயணத்தை கடவுளை நினைத்து செய்ய ஆன்மா சுத்தமாவதோடு கர்மவினைகள் படி படியாக குறைக்கும்.
நாம் தொடங்கிய கிரிவலத்தை இரட்டை பிள்ளையார் கோவிலில் நிறைவு செய்ய வேண்டும்.(ஆமாம்! பிள்ளையார் சன்னதியில் கிரிவலம் நிறைவு செய்யும் கிரிவலமுறை ஒன்று இருக்கிறது.அது இந்த முறை மட்டுமே)
ஒவ்வொரு முறையும் கிரிவலம் செல்லும் போது ஒரே ஒரு சாதுவுக்கு மட்டுமாவது பாய் தானம்,போர்வை தானம், அஷ்ட லிங்கங்களுக்கு பஞ்ச கவ்யம் தானம், நாட்டு மாடுகளுக்கு வாழைப் பழம் தானம் செய்து வர வேண்டும். இப்படி வாரம் ஒரு நாள் அல்லது மாதம் ஒரு நாள் என்று ஒன்பது நாட்கள் கிரிவலம் செல்ல வேண்டும்.
எந்த நாளாக இருந்தாலும் நட்சத்திரமாக இருந்தாலும் திதியாக இருந்தாலும் கிரிவலம் செல்லலாம்.இவ்வாறு முறைப்படி கிரிவலம் செல்ல மனதில் உள்ள பாரம் குறைந்து நாம் நினைத்த வேண்டுதல் நிறைவேறும்.
வாழ்க்கையில் ஒரு முறையாவது கட்டாயம் நாம் கிரிவலம் செல்ல வேண்டும்.இவ்வாறு செய்வதால் நல்ல மாற்றம் ஆன்மீக ரீதியாக கிடைப்பதோடு மட்டும் அல்லாமல் வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை பிறக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |