ஈசன் கால் மாறி ஆடிய ரகசியம்

By Sakthi Raj May 04, 2024 05:14 AM GMT
Report

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என்ற பழமொழிக்கு ஏற்ப ராஜசேகர பாண்டியன், தந்தையை விட சீரும் சிறப்புமாக நாட்டை ஆண்டு வந்தார்.

அவர் எல்லா கலைகளும் கற்றுத் தேர்ந்த ஆனால் சிவன் நாடும் கலையை தானும் ஆடுதல் சரியல்ல என நினைத்து நாட்டிய கலையை மட்டும் தவிர்த்தார்.

ஈசன் கால் மாறி ஆடிய ரகசியம் | Natarajar Madurai Chidambaram Thiruvilaiyadal

சிவன் மீது எத்தனை பக்தி பார்த்தீர்களா? அச்சமயம் சோழ நாட்டை ஆண்டு வந்த கரிகால சோழனிடம் பரிசு வாங்கிய புலவர் ஒருவர் பாண்டிய நாட்டுக்கு வந்தார்.

வந்தவர் சும்மா இல்லாமல் சோழன் 64 கலைகளும் கற்றிருக்கிறார். ஆனால் தாங்கள் ஒரு கலையில் மட்டும் குறைவாக இருக்கிறீர்கள் என்று ஊர் மக்களும் சோழ மன்னனும் பேசிக்கொள்கிறார்கள் என கூறி சென்றார்.

இதுவும் அவன் விளையாட்டுக்கு தான். உடனே ராஜசேகரன் தான் நிறுத்திய ஆடல் கலையை கற்க ஆரம்பித்தான்.

சிவராத்திரி வந்தது அன்று பாண்டியன் வெள்ளயம்பலம் வந்து பஞ்சாட்சரத்தை ஜெபித்தவாறு நடராஜர் சன்னதியில் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது நடராஜன் நாட்டியக்கோலம் அவன் சிந்தனையை தாக்கியது.

ஈசன் கால் மாறி ஆடிய ரகசியம் | Natarajar Madurai Chidambaram Thiruvilaiyadal

இரண்டு காலாலும் நிற்பதற்கே இப்போது எனக்கு கால் கடிக்கிறதே. அதோடு நானும் நாட்டின் கற்றுக் கொண்டிருக்கிறேன் ஒரே காலால் வெகுநேரம் பாவம் காட்டுவதே சோதனை நீரோ வெகுகாலமாகவே இந்த கோளத்தில் நிற்கின்றீரே உமக்கு எவ்வளவு கால் வலிக்கும்.

தயவு செய்து எனக்காக காலை மாற்றி நிற்கவும்ஈசனே என்று வேண்ட விக்ரகத்தில் எந்த மாற்றமும் இல்லை. தன்னுடைய மன வலியால் ஈசனே உனக்கு எதற்கு இத்தனை வலிகள்.இந்த பக்தன் உன்னிடம் என்ன கேட்டுவிட்டான்.?

தங்களுக்கு கால் வலிக்குமே என்று கால் மாறி நிற்க சொன்னது தவறா?என் மனம் புண்ணாகி போனது என்று வலி பொறுக்காமல் தன்னுடைய சிரத்தை உறையில் இருந்து கத்தியை எடுத்து அறுக்க செல்ல கருணை களஞ்சியம் பக்தர்கள் துயர் பொறுக்காத எம்பெருமான் அந்நேரம் வரை வலது காலை ஊன்றி இடது காலைதூக்கி நின்றவர்  சட்டென காலை மாற்றிக்கொண்டார்.

ஈசன் கால் மாறி ஆடிய ரகசியம் | Natarajar Madurai Chidambaram Thiruvilaiyadal

வலது கால் உயர்த்தி ஐயன் ஆடிய கோலம் காண ரிஷிகளும் தேவர்களும் குவிந்துவிட்டனர்.அவ்விடமே கொண்டாட்டம் ஆனது.

திடீர் என ஏற்பட்ட இந்த ஆனந்தத்தை அரசரால் விவரிக்க முடியவில்லை.இந்த பக்தனுக்காக கால் மாற்றி ஆடிய ஈசனே நின் அருளில் நான் கரைந்து விட்டேன்.எம்பெருமானே உன் திருவிளையாடலில் எத்தனையோ அனந்தம்.

அப்பன் என்ன ஆட்கொண்டு எனக்காக கால் மாற்றிய ஈசனே இந்த கோலத்தை என் குலத்தார் எல்லோரும் சேவிக்க வேண்டும் என வேண்டிக்கொள்ள ?ஆகட்டும் என்று குரல் ஆகாயத்தில் ஒலித்தது.

வெள்ளியம்பலத்தில் இறைவன் கால் மாறி நிற்கும் கோலம் எங்கும் காணக் கிடைக்காதது. ஈசன் கால் மாறி ஆடிய இந்த 24-வது திருவிளையாடலை தினமும் பக்தியுடன் படிப்பவரும் கேட்பவரும் இம்மையிலும் மறுமையிலும் எல்லா நலன்களும் பெறுவார்கள்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்



  

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US