நவராத்திரி வீட்டில் கொலு வைக்காதவர்கள் செய்யவேண்டிய பூஜைகள்
புரட்டாசி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதம்.அப்படியாக இப்பொழுது நவராத்திரி கொண்டாட்டம் ஆரம்பம் ஆகிவிட்டது.நவராத்திரி விழா பல இடங்களில் கோலாகலமாக கொண்டப்படும்.நவராத்திரி அம்பிகை வழிபாட்டுக்கு உரியது.அப்படியாக நிறைய பேர் வீட்டில் கொலு வைத்து ஒன்பது நாள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்வார்கள்.
ஆனால் சிலரால் வீடுகளில் கொலு வைத்து வழிபாடு செய்ய முடியாது.அபப்டியாவனவர்கள் இந்த நவராத்திரி நாளில் எவ்வாறு வழிபாடு செய்யவேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
வீட்டில் கொலு வைக்க முடியாதவர்கள் அகண்ட தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம். அகண்ட தீபம் என்பது, வழக்கமாக நாம் ஏற்றும் அகல் தீபத்தைத் தான் குறிக்கிறது.
இது மிகவும் அகலமாக, பெரிய அளவில் இருக்கும் மண் விளக்கு ஆகும். காலை, மாலை, இரவென்று அகண்ட தீபம் அணையாமல் 9 நாட்களும் எரிய வேண்டும்.மேலும், கொலு தவிர்த்து, மீதியுள்ள அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிக்கலாம்.
அடுத்தபடியாக சஷ்டி என்பது நவராத்திரியின் ஆறாம் நாள் கொண்டாடப்படுவது ஆகும்.எனவே, இது வரை அகண்ட தீபம் எற்றாதவர்கள், இன்று ஏற்றலாம். மூன்று நாட்களுக்கு அகண்ட தீபம் அணையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
நவராத்திரி தொடக்க நாளன்று ஏற்ற முடியாதவர்கள், ராகு காலம் எமகண்டம் தவிர்த்து, நவராத்திருக்கு பூஜை செய்யும் முன்பு, நன்றாக பிரார்த்தித்து அகண்ட தீபம் ஏற்றலாம்.
இவ்வாறு ஏற்றி வழிபாடு செய்ய அம்பிகையின் பரிபூர்ண அருள் கிடைத்து வீடு நேர்மறை ஆற்றல் கொண்டு பெருகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |