நவராத்திரி விழாவை பற்றிய சுவாரசிய தகவல்கள்
தமிழ் நாட்டில் மட்டும் அல்லாமல் பல மாநிலங்களில் இந்த நவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டப்படும் ஒன்று.நவராத்திரி என்றாலே நமக்கு முதலில் நினைவிற்கு வருவது வீட்டில் கொலு வைத்து வழிபாடு செய்வது தான்.
அப்படியாக இந்த நவராத்திரி பற்றி நிறைய சுவாரசிய தகவல்கள் இருக்கிறது.அதை பற்றி பார்ப்போம். இந்த நவராத்திரியில் அம்பாளை நினைத்து வழிபாடு செய்பவர்களுக்கு சகல நன்மைகளும் கிடைக்கும் என்பதை ஐதீகம்.இந்த நவராத்திரி ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது.
அந்த ஒன்பது நாட்களில் மூன்று மூன்றாக பிரித்து கொண்டாடப்படுகிறது.இப்பொழுது மூன்றாக பிரித்து கொண்டாடப்படுவதற்கான காரணத்தை பற்றி பார்ப்போம்.
நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் லட்சுமிக்கும் அடுத்த மூன்று நாட்கள் சக்திக்கும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் கொலு கொண்டாடப்படுகிறது. இதனுடைய காரணம் அதாவது வாழ்க்கைக்கு மிக முக்கிய தேவை தேவை பணம்.இதைப் பெறுவதற்கு லட்சுமியை முதலில் வழிபாடுசெய்கின்றோம்.
சம்பாதித்த பணம் மற்றும் புகழ் அதனை பாதுகாக்க அதற்குரிய தைரியத்தையும், வாழ்முறையையும் வேண்டி துர்க்கை, காளி என காவல் தெய்வத்தை வணங்குகிறோம்.
கிடைக்கும் பணத்தை பயனுள்ள காரியங்களுக்கு பயன்படுத்து வேண்டுமே, அதற்காக நல்ல அறிவு சிந்தனை வேண்டி சரஸ்வதியை வணங்குகிறோம்.இது தான் மூன்று நாட்கள் நாம் வழிபடுவதன் காரணம்.
முதல் மூன்று நாள் :
சக்தி தேய்வியை முதல்நாளில் சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சக்தி அவள். இதனால் சாமுண்டா எனவும் அழைப்பர். இவள் மிகவும் கோபக்காரி. நீதியைக் காக்கவே இவள் கோபமாக உள்ளாள்.
இரண்டாம் நாளில் அன்னையை வராஹி தேவியாக கருதி வழிபடவேண்டும். ஏவல், பில்லி சூனியம், எதிரிகள் தொல்லையிலிருந்து விடுபட இவளின் அருளைப் பெறுவது அவசியம். மூன்றாம் நாளில் சக்தித்தாயை இந்திராணியாக வழிபட வேண் டும். இவளை மாஹேந்தரி, சாம் ராஜ தாயினி என்றும் அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி ஆவாள். பெரிய பெரிய பதவிகளை அடைய விரும்புபவர்களிற்கு இவளின் அருட்பார்வை வேண்டும்.
நான்கு, ஐந்து மாற்றும் ஆறாம் நாள்:
இந்த நாட்களில் வைஷ்ணவி தேவியாக வழிபட வேண்டும். ஐந்தாம் நாளில் அன்னையை மகேஸ்வரி தேவி யாக வழிபடவேண்டும். இவள், அளக்கமுடியாத பெரும் சரீரம் உடையவள். சர்வ மங்களம் தருபவள். கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும். ஆறாம் நாள் அன்னையை கவுமாரி தேவியாக வழிபடவேண்டும். சகல பாவங்களையும் விலக்கிடுபவள்,வீரத்தை தருபவள்.
ஏழு,எட்டு மற்றும் ஒன்பதாம் நாள்:
ஏழாம் நாள் அன்னையை மகாலட்சுமியாக வழிபட வேண்டும். தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐஸ்வரியங்களையும் தருபவள் இவள். எட்டாம் நாள் அன்னையை நரசிம்ஹி ஆக வழிபடவேண்டும். ஒன்பதாம் நாள் அன்னையை ப்ராஹ்மி ஆக வழி பட வேண்டும். கல்விச் செல்வம் பெற அன்னையின் அருள் அவசியமாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |