குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாக்கும் வேப்ப மர பரிகாரம்

By Sakthi Raj Oct 09, 2024 10:00 AM GMT
Report

மனிதன் வாழ்க்கையில் பிரச்சனை என்பது சாதாரண விஷயம் தான் இருந்தாலும் பிரச்சனையானது மூன்றாம் நபரால் ஏற்பட்டால் கூட நாம் குடும்பமாக சேர்ந்து சமாளித்து விடலாம்.ஆனால் குடும்பத்தில் பிரச்சனை என்றால் அது நம்முடைய மன அமைதியை முற்றிலும் பாதித்து விடும்.

சமயங்களில் நம்முடைய ரத்த சொந்தங்களே நாம் எதிர்பாராத விதமாக நடந்து கொள்ளும்பொழுது உலகமே இரண்டானது போல் உணர்வு ஏற்படும்.குடும்பம் தான் எல்லோருக்கும் முக்கியமான ஒன்று.குடும்பத்தால் தான் நாம் இயங்கி கொண்டு இருக்கின்றோம்.

அப்படியாக ஒருவர் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படுகிறது என்றால் அதை சரி செய்யும் நிலைமையை கடந்து பிரச்சனை நடக்கிறதே என்று அனைவரும் இறுக்கமான மனநிலைக்கு சென்று விடுவார்கள்.அந்த காலகட்டத்தில் அவர்களுக்கு கட்டாயம் நல்லதோர் ஆறுதல் தேவை படும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாக்கும் வேப்ப மர பரிகாரம் | Neem Tree Parigarangal

அந்த ஆறுதல் ஆனது முதலில் நிதானமும் அமைதியாகத்தான் இருக்கக்கூடும். அந்த அமைதியும் ஆறுதலும் ஒரு மனிதனுக்கு பிற மனிதர்கள் கொடுத்தாலும் அவன் இறைவனை நாடி சென்று சரண் அடைந்து கிடைக்கும் அமைதியானது எப்பொழுதும் மனதில் நிலைத்து நிற்கும்.

அப்படியாக ஒருவர் குடும்பத்தில் அடிக்கடி தேவை இல்லாத மனக்குழப்பங்கள் முடிவில்லாத பிரச்சனை ஏற்படும் பொழுது நாம் செய்யவேண்டிய சில எளிய பரிகாரங்கள் இருக்கிறது.அதை பற்றி பார்ப்போம் நாம் அனைவரும் வெப்ப மரத்தை பற்றி அறிந்து இருப்போம்.

விளக்கு ஏற்றும் போது கட்டாயம் சொல்ல வேண்டிய முருகர் மந்திரம்

விளக்கு ஏற்றும் போது கட்டாயம் சொல்ல வேண்டிய முருகர் மந்திரம்


மருத்துவ ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் வெப்ப மரம் ஒரு நல்ல தீர்வை தரக்கூடியது.அப்படியாக அந்த வேப்பமரத்தில் இருந்து ஒரு சிறு குச்சியை உடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.அதனை வீட்டில் இருக்கும் கன்னிப் பெண்களின் கையில் கொடுத்து ஒரு மஞ்சள் துணியில் வைக்கச் சொல்ல வேண்டும்.

வீட்டில் கன்னி பெண் இல்லை என்றால் நம்முடைய அண்ணன் தம்பி (பங்காளிகள்) வீட்டில் உள்ள கன்னி பெண் கையால் வைக்க சொல்லலாம்.பின்னர் அந்த மஞ்சள் துணியை ஒரு முடிச்சாக முடிந்து கொண்டு அதே பெண்ணின் கையால் பூஜை அறையில் வைக்கச் சொல்லவேண்டும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாக்கும் வேப்ப மர பரிகாரம் | Neem Tree Parigarangal

பிறகு அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து நாம் அன்றாட பூஜைகள் செய்யும் பொழுது அதில் இருக்கும் அதிர்வலைகள் அதற்கு சக்தியை கொடுக்கும். ஒவ்வொரு முறையும் வெள்ளிக்கிழமையில் பூஜை செய்யும் பொழுது இதனையும் சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் இட்டு வைத்துக் கொள்ளவேண்டும்.

இதனை மாற்ற வேண்டிய அவசியமில்லை. வேப்பமரத்தில் அம்பாள் வாசம் செய்கிறாள் எனபது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.அவர்களின் அனுகிரகம் கிடைக்க இவ்வாறு வேப்ப மரக் குச்சியை மஞ்சள் நிற துணியில் முடிந்து வைத்து கொண்டால் போதும்.

நாம் வேண்டும் வேண்டுதல்கள் அத்தனையும் இந்த ஒரு பொருளே நமக்கு நிறைவேற்றிக் கொடுத்து விடும். இத்தனை சக்தி கொண்ட பொருளை பூஜை அறையில் அல்லாமல் வீட்டில் நிலை வாசல் கதவின் மேலே நடுவில் மாட்டி வைத்து கொள்ளலாம்.

இவ்வாறு செய் அம்பாளின் அனுக்கிரகம் கிடைத்து தீராத குடும்ப பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து பரஸ்பர ஒற்றுமையுடன், மன அமைதியுடன் இருப்பார்கள்.மேலும் நாம் மனதில் நினைத்து வேண்டிக்கொண்ட அனைத்து விஷயங்களும் நடக்க அம்பாளின் பரிபூர்ண அருள் கிடைக்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US