வாஸ்து: வீடுகளில் குளவி கட்டினால் இதை மட்டும் செய்து விடாதீர்கள்
நம்முடைய வீடுகளில் சில நேரங்களில் குளவி கூடு கட்டி இருப்பதை பார்த்திருப்போம். இருப்பினும் ஒரு சிலர் பாதுகாப்பு கருதி உடனடியாக அகற்றி விடுவார்கள்.
ஆனால், சாஸ்திரங்கள் நம்முடைய வீடுகளில் கட்டிய குளவிக்கூட்டை அகற்றக் கூடாது என்று சொல்கிறார்கள். அதற்கு பின்னால் இருக்கக்கூடிய காரணம் என்னவென்று பார்ப்போம்.

]
வீட்டில் குளவி கூடு கட்டினால் அது குடும்பத்தில் குழந்தை பிறப்பதற்கான பாக்கியத்தை கொடுக்கப் போவதின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. மேலும், அவை நமக்கு செல்வ வளத்தை அதிகரிப்பதற்கான ஒரு அறிகுறியாகவும் கருதப்படுகிறது.
அதனால் வீடுகளில் குளவி கூடு கட்டினால் அதை எந்த காரணத்திற்கு கொண்டும் கலைக்க வேண்டாம். அதோடு, வீடுகளில் கூடவே அரக்கால் கூடு கட்டினால் பெண் குழந்தை பிறக்கும் என்றும் மண்ணால் கூடு கட்டினால் ஆண் குழந்தை பிறக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இருந்தாலும், நிச்சயம் ஆபத்து என்று கருதினால் இறைவனை பிரார்த்தனை செய்து கரைத்து விடலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |